ரூ.3 ஆயிரம் கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த எஸ்பிஐ; ரூ.14 ஆயிரம் கோடி டெபாசிட்

By SG BalanFirst Published May 30, 2023, 6:04 PM IST
Highlights

ரிசர்வ் வங்கி ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்ததை அடுத்து, புழக்கத்தில் இருந்த சுமார் 20% நோட்டுகள் தங்களிடம் வந்துவிட்டதாக ஸ்டேட் வங்கி சொல்கிறது.

ரிசர்வ் வங்கி ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்ததை அடுத்து, பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ரூ.17,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "இதுவரை ரூ.3,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்று வழங்கப்பட்டிருக்கிறது. ரூ.14,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, புழக்கத்தில் இருந்த சுமார் 20% நோட்டுகள் எங்களிடம் வந்துள்ளன" என்று கூறி இருக்கிறார்.

ஸ்வீடனை அலறவிடும் ரஷ்யாவின் உளவாளி திமிங்கலம்! 4 ஆண்டுகளுக்குப் பின் திரும்ப வந்ததால் பீதி!

2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக மே 19 அன்று இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் 2000 ரூபாய் நோட்டுக்கு தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை தவிர்க்குமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, செப்டம்பர் 30, 2023 வரை, மக்கள் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக் கிளையிலும் கொடுத்து வேறு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு மாற்றும்போது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மட்டுமே மாற்றிக்கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம். 

கொலை வெறியுடன் புதிய கத்தி வாங்கிய ஷாஹில் கான்! டெல்லி சாக்‌ஷி சிங் கொலையின் அதிர்ச்சித் தகவல்கள்

வழக்கமான முறையில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்லாம். 2000 ரூபாய்க்கு மாற்று பெறுவதற்கு எந்தவிதமான படிவத்தை நிரப்புவதோ, அடையாளச் சான்றைக் காட்டுவதோ அவசியம் இல்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது.

நவம்பர் 2016 இல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன.  இதனால் ஏடிஎம்களிலும் வங்கிகளிலும் காத்திருந்து ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சிக்கப்பட்டது. பின்னர், மதிப்பிழந்த நோட்டுகளுக்கு மாற்றாக ரூ.2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

மோடியா? ஸ்டாலினா? ஸ்டிக்கர் சர்ச்சையால் பயன்பாடின்றி துருப்பிக்கும் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள்

click me!