Heliport License: இனிமேல் ஹெலிபோர்ட் லைசன்ஸ் எடுக்க சுலபமான செயல்முறை..!

Published : May 30, 2023, 05:37 PM IST
Heliport License: இனிமேல் ஹெலிபோர்ட் லைசன்ஸ் எடுக்க சுலபமான செயல்முறை..!

சுருக்கம்

ஹெலிபோர்ட் உரிமம் வாங்க விண்ணப்பிக்கும் செயல்முறையை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எளிமையாக்கியுள்ளது. 

'ஹெலிபோர்ட்' என்பது ஹெலிகாப்டர் தளமாகும். இதற்கு உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறைகள் முன்னதாக சிரமத்தை அளித்தன. இதன் செயல்முறையை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தற்போது எளிமையாக்கியுள்ளது. இதற்கென பெறப்படும் தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate- NOC) / கிலியரன்ஸ் விண்ணப்பங்களை eGCA தளத்தில் 5 அமைப்புகளுக்கு ஒரே டேப் மூலம் அனுப்பும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வழங்கும் ஹெலிபோர்ட் உரிமம்/ அங்கீகாரம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் eGCA போர்டல் மூலம் DGCA -க்கு ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஐந்து அமைப்புகளிடம் ஆன்லைன் மூலமாக அல்லது நேரடியாக என்ஓசி/கிளியரன்ஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். 

யார் அனுமதிக்க வேண்டும்? 

  1. உள்துறை அமைச்சகம்
  2. பாதுகாப்பு அமைச்சகம்
  3. சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம்
  4. இந்திய விமான நிலைய ஆணையம்
  5. உள்ளூர் நிர்வாகம் - இந்த 5 அமைப்புகளிடமும் தனித்தனியாக கிளியரன்ஸ் பெற வேண்டும். இந்த செயல்முறை இப்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மாணவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. பம்பர் சலுகை.. எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா?

இதற்காக விண்ணப்பதாரரின் eGCA சுயவிவரத்தில் புதியதாக அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து அமைப்புகளுக்கும் ஒரே முறையாக என்ஓசி/கிளியரன்ஸ் விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இதில் அந்தந்த நிறுவனங்களின் URL இணைப்பு/மின்னஞ்சல் கொடுக்கப்பட்டிருக்கும். இது விண்ணப்பதாரர்களுக்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது. 

நவம்பர் 2021 இல் eGCA (e-Governance in Directorate General of Civil Aviation) என்ற போர்டல் மத்திய அமைச்சர் சிந்தியாவால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் விமான போக்குவரத்துக்கான பல செயல்பாடுகள் எளிமையாகியுள்ளன. நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தவும், ஹெலிகாப்டர்கள் உட்பட நாட்டின் கடைசி இணைப்பை அடையவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிங்க: இரத்தத்தில் சர்க்கரை அளவை எகிற வைக்கும் 3 மாவுகள் எவை தெரியுமா? தவறுதலா கூட சுகர் இருக்கவங்க சாப்பிடாதீங்க!!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?