அனைத்து தேவைக்கும் ஒரே பாலிசி போதும்! காப்பீட்டு ஆணையம் கொண்டுவரும் புதிய திட்டம்!

By SG BalanFirst Published May 28, 2023, 12:14 AM IST
Highlights

பீமா டிரினிட்டி என்ற பெயரில் அனைத்து விதமான காப்பீடுகளையும் உள்ளடக்கிய தொகுப்பாக புதிய இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து விதமான பலன்களையும் கொடுக்கும் ஒரே இன்சூரன்ஸ் பாலிசி திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) கூறியுள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்பீடு, சொத்துக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, உடல்நலக் காப்பீடு ஆகியவை ஒரே பாலிசியில் அடங்கும்.

வரவிருக்கும் இந்தப் புதிய இன்சூரன்ஸ் பாலிசி மலிவு விலையில் ஆயுள், உடல்நலம், விபத்து மற்றும் சொத்து காப்பீட்டை உள்ளடக்கிய தொகுப்பாக இருக்கும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தேபாசிஷ் பாண்டா கூறியுள்ளார். பொது காப்பீட்டு வாரியம் மற்றும் ஆயுள் காப்பீட்டு வாரியம் ஆகியவை இணைந்து புதிய பாலிசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன எனவும் பாண்டா தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள் தண்டனை! வீட்டில் பைபிள் இருந்ததுதான் குற்றமாம்!

இந்தப் புதிய ஆல்-ரவுண்ட் இன்சூரன்ஸ் பாலிசிக்கு பிமா டிரினிட்டி (Bima Trinity) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'பீமா டிரினிட்டி'யில் பீமா சுகம், பீமா விஸ்தார், பீமா வஹாக் ஆகியவற்றின் பலன்களும் அடங்கும். கடந்த அக்டோபர் 2022 இல், ஐஆர்டிஏஐ இந்த மூன்று திட்டங்களின் செயல்பாடு பற்றியும் அவை எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்பது குறித்தும் ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்க ஒரு குழுவை அமைத்தது.

புதிய பாலிசி திட்டம் ஒரு பொதுவான தளத்தில் மரணப் பதிவேடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் உரிமைகோரல் தீர்வுகளை விரைவுபடுத்துகிறது. இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் இதன் மூலம் ஒட்டுமொத்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன் அடையும் வாய்ப்பு அமையும். விரிவான பாதுகாப்பு, விரைவான உரிமைகோரல் தீர்வுகள் போன்ற கூடுதல் சேவைகளும் கிடைக்கும்.

40 முதலைகளால் கொல்லபட்ட முதியவர்! கம்போடியா பண்ணையில் நடந்த பயங்கரம்!

காப்பீட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பீமா டிரினிட்டி திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் துறையில் யுபிஐ பயன்பாட்டைக் கொண்டுவரவும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவான அணுகுமுறை குடிமக்கள் அனைவரும் பாலிசி எடுப்பதில் கட்டுப்படியாகக்கூடிய மற்றும் அணுகக்கூடிய தன்மையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாலிசியில் நஷ்டம் ஏற்பட்டால், வரையறுக்கப்பட்ட பலன் உடனடியாக பாலிசிதாரரின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிடும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் தற்போதுள்ள காப்பீட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைக்கும் என்றும் ஐஆர்டிஏஐ கருதுகிறது.

வேலூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த கைக்குழந்தை பரிதாப பலி

click me!