ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

By Raghupati R  |  First Published May 27, 2023, 3:06 PM IST

வருகின்ற ஜூன் 2023ல் வங்கிகள் 12 நாட்களுக்கு மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இந்த விடுமுறைகளில் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் இரண்டாவது - நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடுமுறைப் பட்டியலின்படி, 12 விடுமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதம் இன்னும் சில நாட்களில் முடிந்து புதிய மாதம் அதாவது ஜூன் மாதம் தொடங்குகிறது. ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆர்பிஐ சமீபத்தில் உத்தரவிட்டது. செப்டம்பர் 30, 2023 வரை உங்களின் 2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். எனவே ஜூன் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற திட்டமிட்டால், இந்த மாதத்தில் பல வங்கி விடுமுறைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tap to resize

Latest Videos

1.ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 4, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

2.சனிக்கிழமை, ஜூன் 10, 2023- இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த நாள் வங்கி விடுமுறையாக இருக்கும்.

3.ஞாயிறு, ஜூன் 11, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

4.வியாழன், ஜூன் 15, 2023- ராஜ சங்கராந்தி காரணமாக மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

5.ஞாயிறு, ஜூன் 18, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

6.செவ்வாய்க்கிழமை, ஜூன் 20, 2023- ரத யாத்திரை காரணமாக ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

7.சனிக்கிழமை, ஜூன் 24, 2023- நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்படும்.

8.ஞாயிறு, ஜூன் 25, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

9.திங்கட்கிழமை, ஜூன் 26, 2023- கார்வி பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

10.புதன்கிழமை, ஜூன் 28, 2023- ஈத்-உல்-அழா காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

11.வியாழன், ஜூன் 29, 2023- ஈத்-உல்-அழாவை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

12.வெள்ளிக்கிழமை, ஜூன் 30, 2023- ஈத்-உல்-அழா அன்று மிசோரம், ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க..ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்

click me!