
மது பிரியர்களில் பெரும்பாலானோர் வோட்கா என்ற பெயரைக் கேட்டிருப்பார்கள். இது சிலரின் விருப்பமான பிராண்டாகவும் உள்ளது. ஒரே பிராண்டில் பல வகைகள் உள்ளன, அவற்றின் விலையும் வேறுபடுகிறது. ஆனால் உலகின் மிகவும் விலை உயர்ந்த வோட்கா பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் விலையை நிச்சயம் பலரால் யூகிக்கவே முடியாது. ஆம். அந்த விலை உயர்ந்த வோட்கா பில்லியனர் வோட்கா தான். இது தான் உலகின் விலை உயர்ந்த வோட்காவாக கருதப்படுகிறது. பில்லியனர் என்ற பெயருக்கு ஏற்பவே, அதன் விலையும் மிகவும் அதிகமாகவே உள்ளது.
லியோன் வெர்ரெஸ் நிறுவனத்தின் பில்லியனர் வோட்கா, உலகிலேயே மிக விலையுயர்ந்த மதுபானமாகும். இதன் விலை 3.7 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 30 கோடி. ஆனால் இந்த விலைமதிப்பற்ற இறக்குமதி செய்யும் போது சுங்கத் துறை எந்த வரியும் விதிக்கப்படாது.
எந்த மதுபான பாட்டிலிலும் இல்லாத வகையில், இந்த வோட்கா பாட்டில் 3,000 வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மதுபான பாட்டில் கவர்ச்சிகரமான வயலட் நிற கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனித்துவமான கலை பாணியையும் கொண்டுள்ளது. இது பிளாட்டினம் மற்றும் ரோடியம் ஆகியவற்றின் கலவையாகும். இந்த பாட்டில் படிக மேற்பரப்பில் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் தங்க முத்திரையும் உள்ளது. இவ்வளவு விலையுயர்ந்த வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த வோட்கா பாட்டிலுக்குள் உலகின் விலை உயர்ந்த மதுபானம் உள்ளது. இதன் காரணமாகவே இது உலகின் விலையுயர்ந்த மதுபானமாக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.