கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாட்டில் செலவு செய்தால் TCS வரி இல்லை.. மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்

By Ramya s  |  First Published Jun 30, 2023, 9:29 AM IST

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு செலவில் டிசிஎஸ் வரி விதிக்கப்படாது எனவும், புதிய விதிகள் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 206C-ன் துணைப்பிரிவு (1G) LRS (Liberalised Remittance Scheme) மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் வெளிநாட்டுப் பயணத் திட்டப் பேக்கேஜ்களின் விற்பனை ஆகியவற்றின் மீது மத்திய அரசு TCS வரி வசூல் செய்கிறது. ஆனால் சமீபத்தில் நிதிச் சட்டம் 2023 மூலம், சட்டத்தின் பிரிவு 206Cன் துணைப் பிரிவில் (1G) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அரசின் நிதி மசோதா 2023, LRSன் கீழ் வெளிநாட்டுச் செலவுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பேக்கேஜ்களுக்கான TCSஐ 5%லிருந்து 20% ஆக உயர்த்தியுள்ளது. மேலும், SRS இன் கீழ் TCS பொருந்தக்கூடிய முந்தைய வரம்பு 7 லட்சமாக நீக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரண்டு மாற்றங்களும் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்குப் பொருந்தாது. இந்த திருத்தம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

சுவிட்சர்லாந்தில், உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கிய இந்திய குடும்பம்.. தலைசுற்ற வைக்கும் விலை!

இந்த நிலையில் சர்வதேச கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வெளிநாட்டில் செய்யப்படும் செலவுகள் LRSன்கீழ் வராது என்றும், எனவே, டிசிஎஸ் இதற்குப் பொருந்தாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணச் செலவுகள் உட்பட LRSன் கீழ் வெளிநாடுகளில் செலவழிக்க 20% டிசிஎஸ் விதிக்கும் விதியை அமல்படுத்துவது மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜூலை 1 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் அட்டை நெட்வொர்க்குகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்புகளை உருவாக்க போதுமான நேரத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வெளிநாட்டு டூர் பேக்கேஜ்கள் உட்பட அனைத்து நோக்கங்களுக்காகவும் வரி செலுத்தும்  ஒரு நபருக்கு ஆண்டுக்கு 7 லட்சம் என்ற அளவு நிர்னயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிசிஎஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பு திட்டமிட்டபடியே இருக்கும். இந்த திருத்தத்தில் சர்வதேச கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் செய்யப்படும் செலவுகளுக்கு 20% டிசிஎஸ் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழலில், சர்வதேச கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் செலவு செய்தால் டிசிஎஸ் வசூலிக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, TCS வரியின் அளவைக் குறிப்பிடுவதன் மூலம் வரி திரும்பப் பெறலாம். இருப்பினும், கல்விச் செலவு தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. கல்விக் கட்டணம் செலுத்துவதற்காகக் கடன் பணத்தை வெளிநாடுகளுக்கு மாற்றினால், கடந்த காலத்தைப் போல ஒரு நிதியாண்டில் ரூ.7 லட்சம். அதிகப்படியான தொகைக்கு 0.5% TCS கழிக்கப்படும்.

இருப்பினும், கல்விச் செலவுகள் கடன்களால் ஈடுசெய்யப்படாத சந்தர்ப்பங்களில், 7 லட்சத்தை விட அதிகமாக மாற்றினால் 5% வரி விதிக்கப்படும். இந்த இரண்டு விதிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக, வெளிநாடுகளில் மருத்துவச் செலவுக்காக மாற்றப்படும் பணத்திற்கு 5% வரி விதிக்கப்பட்டது, ஆனால் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் தவிர எல்.ஆர்.எஸ்.க்கு 7 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவரை டிசிஎஸ் கட்டணம் வசூலிக்கப்படாது. 7 லட்சத்துக்கு மேல் இருந்தால் 20% டிசிஎஸ் விதிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ் செலவுக்கு 7 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவரை டிசிஎஸ் கட்டணம் வசூலிக்கப்படாது. இருப்பினும், 7 லட்சத்திற்கு மேல் இருந்தால், 20% டிசிஎஸ் விதிக்கப்படும்.

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன? சிலிண்டர் விலை குறையுமா?

click me!