வாரத்தின் முதல்நாளே தங்கம் விலை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் கணிக்க முடியாத நிலையில் இருந்த நிலையில் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
வாரத்தின் முதல்நாளே தங்கம் விலை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் கணிக்க முடியாத நிலையில் இருந்த நிலையில் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு 280 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805க்கும், சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது.
பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1200புள்ளிகள் வீழ்ச்சி: ஐடி பங்குகள் அடி: காரணம் என்ன?
தங்கம் விலை திங்கள்கிழமை(இன்று) காலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் சரிந்து, ரூ.4,770 ஆகவும், சவரனுக்கு ரூ.280 வீழ்ச்சி அடைந்து, ரூ.38,160ஆகவும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4770ஆக விற்கப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. கடந்த 22ம் தேதி தங்கம் கிராம் ரூ.4815 என்ற நிலையில் இருந்தது, ஆனால் வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை ரூ.4,805 என்ற அளவில் இருந்தது. சவரனும், ரூ.38,520 என்ற விலையில் இருந்தது. இடைப்பட்ட 4 நாட்களில் சவரனுக்கு ரூ.80 குறைந்து, இன்று சவரன் ரூ.38,440 ஆக இருந்தது
இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.38ஆயிரத்துக்கும் கீழ் வர உள்ளது.
என்ன காரணம்
அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் பாவெல் சனிக்கிழமை பேசுகையில் “ அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் மாதத்தில் வட்டிவீதம் கடுமையாக உயர்த்தப்படும்” என எச்சரித்திருந்தார். இதனால் டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் வலுப்பெறத் தொடங்கியது. அமெரிக்கப் பங்குப்பத்திரங்களுக்கான மதிப்பும் உயர்ந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப்பெற்று டாலரில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் இன்றுகாலை பெருத்த அடி வாங்கியுள்ளன. இனிவரும் நாட்களில் டாலர் மதிப்பு வலுவடைந்தால், தங்கத்தின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்
‘ஹாஸ்டைல் டேக்ஓவர்’ என்றால் என்ன? இப்படித்தான் என்டிடிவியை கபளீகரம் செய்ததா அதானி குழுமம்
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 70 பைசா சரிந்து, ரூ.60.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.60,000க்கும் விற்கப்படுகிறது