Stock Market Today: பங்குச்சந்தையில் தொடரும் வீழ்ச்சி| சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு! நிப்டி இறக்கம்

இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும்வீழ்ச்சி நீடிக்கிறது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிந்துள்ளன.


இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும்வீழ்ச்சி நீடிக்கிறது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிந்துள்ளன.

அமெரிக்காவின் பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தப்போகிறது என்ற தகவல் முதலீட்டாளர்களை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையும் , ஆசியச் சந்தைகளும் சரிந்தது, இந்திய சந்தையில் மோசமாக நேற்று எதிரொலித்தது.

Latest Videos

இந்த ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் நேற்று நடந்த வீழ்ச்சி மோசமானதாகப் பார்க்கப்படுகிறது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்து, நிப்டியும் மோசமாக வீழ்ந்தது.

பங்குச்சந்தை படுவீழ்ச்சி|ரூ.7 லட்சம் கோடி காலி!சென்செக்ஸ்927 புள்ளிகள் சரிவு:4 காரணங்கள்!

இது தவிர அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களின் பங்குகளும் நேற்று வீழ்ந்தன. இது பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தது. கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவுக்கும், ஊசலாட்டத்துக்கும் அதானி குழுமத்தின் பங்ககுள் வீழ்ச்சியும் முக்கியக் காரணமாகும்.

காலை வர்த்தகம் தொடங்கியதும் ஏற்றத்துடன் தொடங்கி பின்னர் மீண்டும் சரியத் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 194 புள்ளிகள் குறைந்து, 59,550 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 60 புள்ளிகள் குறைந்து, 17,494 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 11 நிறுவனங்களின் பங்குகள்

அதானி குழுமம் ரூ.1,500 கோடி கடனை SBI பரஸ்பர நிதி, ஆதித்யா பிர்லாவுக்கு திருப்பிச் செலுத்தியது

லாபத்தைநோக்கி நகர்கின்றன, மற்ற 19 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன. எச்சிஎல்டெக், விப்ரோ, லார்சன்அன்ட்டூப்ரோ, டாடாஸ்டீல், கோடக்வங்கி, இன்போசிஸ், டிசிஎஸ் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளன.

நிப்டியில் ஓஎன்ஜிசி, எச்சிஎல் டெக், யுபிஎல், பிபிசிஎல், டிசிஎஸ் பங்குகள் மதிப்பு லாபத்தில் உள்ளன, அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ்,  டைட்டன் பங்குகள் சரிவில் உள்ளன


 

click me!