இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சியில் உள்ளன.
சரிவுக்கு காரணம் என்ன
அமெரிக்காவின் பணவீக்கம் குறையாமல் இருப்பதால் பெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை உயர்த்த இருக்கிறது என்ற செய்தி சர்வதேச சந்தையை உலுக்கி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இந்தியசந்தையில் இருந்து ரூ.3466 கோடிக்கு பங்குகளை விற்றுமுதலீட்டை அந்நிய முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர்.
பங்குச்சந்தை 6-வது நாளாகச் சரிவு| சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: உலோகம், PSU இழப்பு
அமெரிக்க கடன்பத்திரங்கள் மதிப்பும் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 3.93% அதிகரித்துள்ளது
இருப்பினும் இந்தியாவில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவதால், அதரவு அளிப்பதால் சந்தையில் பெரிய இழப்பு, சரிவு ஏற்படாமல் தடுக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியச்சந்தையில் வாரத்தின் முதல்நாளான இன்றும் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. காலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 450 புள்ளிகள் குறைந்து, 59,011புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. நிப்டி144புள்ளிகள் சரிந்து, 17,321 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது
பங்குச்சந்தை| 4 நாட்களுக்குப்பின் சென்செக்ஸ், நிப்டி உயர்வு!
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 11 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்றவை சரிவில் உள்ளன. ஏசியன்பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஐடிசி, டைட்டன், நெஸ்ட்லே இந்தியா, பவர்கிரிட், இன்டஸ்இன்ட்வங்கி, சன்பார்மா பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன
நிப்டியில் பஜாஜ் ஆட்டோ, அதானி என்டர்பிரைசர்ஸ், இன்போசிஸ், டெக் மகிந்திரா, பார்தி ஏர்டெல் பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தன. பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், சிப்லா, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிட் ஆகியவை சரிவில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.