spicejet: spicejetshare: ஸ்பைஸ்ஜெட்டுக்கு மீண்டும் சிக்கல்: 9-வது முறையாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு?

By Pothy RajFirst Published Jul 12, 2022, 1:17 PM IST
Highlights

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களில் சிக்கிய நிலையில் இந்த வாரத்திலும் அது தொடர்கிறது. கடந்த 24நாட்களில் 9-வது முறையாக தொழில்நுட்ப சிக்கலில் சிக்கியுள்ளது. 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களில் சிக்கிய நிலையில் இந்த வாரத்திலும் அது தொடர்கிறது.கடந்த 24நாட்களில் 9-வது முறையாக தொழில்நுட்ப சிக்கலில் சிக்கியுள்ளது. 

டெல்லியிலிருந்து துபாய் சென்ற விமானம் துபாயில் தரையிறங்கியபின் விமானத்தின் நோஸ்-வீல் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் 8ஆண்டு பழைமையான போயிங் 737 விமானம்தான் இயக்கப்பட்டுள்ளது. இந்த விமானம்தான் தொழில்நுட்ப கோளாறால் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கோளாறால் பயணிகளுக்கு எந்தபிரச்சினையும் இல்லை, அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். இந்த விவகாரம் குறித்து கேட்டபோது ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்திடம் இருந்து பதில் ஏதும் இல்லை.

அய்யோ! அந்த ப்ளைட்டா! ஸ்பைஸ்ஜெட்டை கண்டு தெறித்து ஓடும் பயணிகள்

பாதுகாாப்பு குறைபாடு இல்லை

ஆனால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் ப்ளூம்பெர்க் தளத்துக்கு அளித்த பேட்டியில், “ எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடும், தொழில்நுட்பக் கோளாறும் விமானத்தில் நடக்கவில்லை. ஆனால், விமானம் புறப்படும் நேரத்தில் கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கு தொழில்நுட்ப கோளாரு காரணம். 11ம்தேதி(நேற்று) துபாயிலிருந்து மதுரைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி23 விமானம் இயக்கப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட இருந்த சிறிது நேரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாகக்கூறினர்.

இதையடுத்து மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் துபாய் உள்ளூர் நேரப்படி மாலை 6.35க்கு புறப்பட்டனர். விமானம் தாமதமாகுவது எந்த விமான நிறுவனத்துக்கும் இயற்கைதான். ஆனால், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏதும் நடக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளும் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

ஸ்பைஸ்ஜெட்டுக்கு சிக்கல்: டிஜிசிஏ நோட்டீஸ்: 2 மாதத்தில் 7-வது பாதுகாப்பு குறைபாடு சம்பவம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 3 பாதுகாப்பு குறைபாடுகளை எதிர்கொண்டு கடும் விம்சனத்துக்குள்ளானது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது.

டெல்லியிலிருந்து கடந்த வாரம் துபாய்க்கு  சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்  தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறங்கியது. மற்றொரு சம்பவமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் க்யூ400 டர்போபிராப் விமானம் குஜராத்தின் கான்ட்லாவிலிருந்து மும்பைக்கு சென்றது. அப்போது வின்ட்ஷீல்ட் பகுதியில் பறக்கும்போது நடுவானில் கீறல் ஏற்பட்டது. 

இதனிடையே கொல்கத்தாவிலிருந்து ஸ்பைஸ்ஜெட்நிறுவனத்தில் சரக்கு விமானம் சீனாவுக்குப் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை காரணமாக விமானம் மீண்டும் தரையிறங்கியது. கடந்த 18 நாட்களில் நடந்த 7-வது சம்பவம் இதுவாகும்.

ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டம் சரியில்ல! பங்குமதிப்பு 7% வீழ்ச்சி:52 வாரங்களில் இல்லாத சரிவு

பயணிகள் தயக்கம்

லோக்கல்சர்க்கில்ஸ் என்ற நிறுவனம் பயணிகளின் விமானநிறுவனங்கள் குறித்து சர்வே நடத்தியது. இதில் 21 ஆயிரம் பயணிகள் பங்கேற்றனர். இந்த ஆய்வில் சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பாதுகாப்பு குறைபாடுகளைச் சந்தித்ததால், அந்த விமானத்தில் பயணிப்பதை தவிர்ப்பதாக 44 சதவீதப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

click me!