china bank protest: சீனாவில் வங்கிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: பணம் வழங்க அரசு உறுதி

By Pothy Raj  |  First Published Jul 12, 2022, 11:31 AM IST

சீனாவின் ஹீனன் மாகாணத்தில் உள்ள ஹெங்ஜூ நகரில் வாழும் மக்களின் வங்கி டெபாசிட்கள் முடக்கப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்காண மக்கள்  வீதியில் இறங்கி போராடினர். 


சீனாவின் ஹீனன் மாகாணத்தில் உள்ள ஹெங்ஜூ நகரில் வாழும் மக்களின் வங்கி டெபாசிட்கள் முடக்கப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்காண மக்கள்  வீதியில் இறங்கி போராடினர். 

மக்கள் ஆவேசமான போராட்டத்தையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக மக்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். 

Tap to resize

Latest Videos

கடந்த 2 மாதங்களாக மக்களின் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமலும்,தங்கள் டெபாசிட்களை எடுத்து செலவிட முடியாமல் திணறி வருகிறார்கள். பொறுமை காத்த மக்கள், வீதியில் இறங்கி போராடினர்.

ஹீனன் மாநில அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிராக வங்கியில் டெபாசிட் செய்த மக்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. 
ஹீனன் மாகாணத்தில் மக்கள் நடத்தியப் போராட்டம் என்பது இலங்கையில் பொருளாதாரச் சீரழிவுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தைப்  போல் இருந்தது. இதனால் இலங்கையைப் போல் சீனாவும் மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியது. 

போராட்டம் ஏன் 

ஹீனன் மாகாணத்தில் உள்ள 4 வங்கிகள் கடந்த ஏப்ரல்மாதத்திலிருந்து லட்சக்கணக்கான டெபாசிட்தாரர்களின் பணத்தை எடுக்கவிடாமல் முடக்கி வைத்தனர். இதன் மதிப்பு மட்டும் 150 கோடி டாலர் இருக்கும் எனத் தெரிகிறது. 

வங்கி டெபாசிட்டை முடக்கியதால், லட்சக்கணக்காண மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியது. கொரோனா பரவலில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு பொருளாதாரா ரீதியாக மீள்வதற்கு வங்கி டெபாசிட்கள்தான் உதவும். ஆனால், அதையும் வங்கி முடக்கியது மக்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது.

வங்கிகள் தங்களின் டெபாசிட்களை முடக்கியதற்கு எதிராக கடந்த 2 மாதங்களாக மக்கள் போராடி வந்தனர். குறிப்பாக ஹீனன் மாகாணத்தில் தலைநகர் ஹெங்ஜூவில் பல போராட்டங்களை மக்கள் நடத்தியபோதிலும், அது ஆட்சியாளர்கள், அதிகாரிகள் காதில் விழவில்லை.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் உச்சமடைந்தது. ஹெங்கஜூ நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வங்கி நிர்வாகத்துக்கு எதிராகவும், தங்களின் டெபாசிட்களை திரும்பத் தருமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீனா மத்திய வங்கி, சீனா மக்கள் வங்கிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். 
வங்கி நிர்வாகமோ " வங்கி நிர்வாகம், செயல்முறை ஆகியவற்றின் கட்டமைப்பை மாற்றி, மேம்படுத்தி வருகிறோம் அதனால்தான் டெபாசிட்களை முடக்கி இருக்கிறோம்" என்று பதில் அளித்தனர். ஆனால், இந்த பதில் மக்களுக்கு மனநிறைவைத் தராததால் போராட்டம் தீவிரமடைந்தது. போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

ஹீனன் மாகாணத்தில் உள்ள 4 வங்கிகள் மக்களின் பணத்தை முடக்கியுள்ளது குறித்து சீன அரசு விசாரணை நடத்த உள்ளது.

எந்தெந்த வங்கிகள் டெபாசிட்களை முடக்கியுள்ளன

1.    யூஸ்ஹூ ஸின்மின்செங் கிராம வங்கி(சூசாங் சிட்டி, ஹீனன் மாகாணம்)
2.    ஹெக்செங் ஹூவாங்குவாய் வங்கி(செங்குய் ஹீனன் மாகாணம்)
3.    சாங்கியா ஹூய்மின் கிராம வங்கி(ஹூமாதியன் நகரம், ஹீனன் மாகாணம்)
4.    நியூ ஓரியன்டல் கிராம வங்கி(கெய்பெங் நகரம், ஹீனன் மாகாணம்)
5.    ஹூவாய்ஹி ரிவர் கிராம வங்கி(பெங்பூ நகரம், அன்ஹூய் மாகாணம்)
6.    யிக்ஸியான் கவுன்டி கிராம வங்கி( ஹூவாங்ஷான் நகரம், அன்ஹூய் மாகாணம்)

அதிபர் ஜி ஜின்பிங் அரசுக்கு நெருக்கடி

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தப் போராட்டம் பெரும் நெருக்கடியை அளித்துள்ளது. அடுத்தசில மாதங்களில் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நிலையில், இந்தபோராட்டம் நெருக்கடியை அளிக்கும்.

பணம் விடுவிப்பு

இந்நிலையில் முடக்கப்பட்ட மக்களின் பணம் படிப்படியாக வரும் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் பெற்றுக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை காலை 9மணி முதல் வங்கிகளுக்கு மக்கள் நேரில் வரலாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

click me!