சீனாவில், ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்ஜோ ( Zhengzhou) நகரில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை கண்டித்து வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில், ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்ஜோ ( Zhengzhou) நகரில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை கண்டித்து வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, நிதி முடக்கப்பட்டதை அடுத்து, வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் தெருப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தற்போது சுமார் இரண்டு மாதங்களாக நிலவி வரும் பணப்புழக்க நெருக்கடி காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கோத்தபய ராஜபக்சே
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள வங்கி வைப்புநிதி வைத்துள்ளவர்கள், அனைவரும் ஒன்று திரண்டு ஹெனான் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். இந்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து வைப்புநிதிகளை வங்கி முடக்கியதாகவும் தங்களது சேமிப்பை திரும்பத்தரக்கோரியும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். வங்கியின் இந்த செயலால் சீனாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இலங்கையை போல காட்சியளிக்கிறது.
மிகப்பெரிய போராட்டத்திற்கான காரணம் என்ன?
சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்கு கிராமப்புற வங்கிகள், கடந்த ஏப்ரல் மாதம் முதல், மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள வைப்புநிதிகளை முடக்கியுள்ளன. கொரோனா தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தை வங்கிகளின் இந்த செயல் அச்சுறுத்தி வருகிறது. சமீபகாலமாக நீடித்து வந்த போராட்டம் கடந்த 2 மாதங்களாக தொடர்கிறது. கிளர்ந்தெழுந்த வைப்புநிதியாளர்கள் ஹெனானின் மாகாண தலைநகரான ஜெங்ஜோவில் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இதையும் படிங்க: இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் புதிய அதிபர் தேர்வு… அறிவித்தார் சபாநாயகர்!!
ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதை அடுத்து நேற்று (ஜூலை 10) ஆசிய நாடு முழுவதிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கியின் Zhengzhou கிளைக்கு வெளியே ஒன்று கூடி தங்களது மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கொரோனாவுக்கு பிறகு சீனா கண்ட மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முடக்கப்பட்ட வைப்புநிதியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சீன ஊடகங்களின் அறிக்கைகளின்படி, முடக்கிவைக்கப்பட்டுள்ள வைப்பு நிதியின் மதிப்பு சுமார் 1.5 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, நான்கு வங்கிகளில் மூன்றில் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஏப்ரலில் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள வைப்புநிதிகளை முடக்கத் தொடங்கிய வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் தங்கள் உள் அமைப்புகளை மேம்படுத்துவதாகக் கூறி வந்தன. மேலும், எந்த வங்கிகளும் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
வைப்புநிதிகளை முடக்கிய வங்கிகளின் விவரம்:
ஆசியா மார்க்கெட்ஸின் அறிக்கையின்படி, ஹெனான் மற்றும் அன்ஹுய் மாகாணங்களில் உள்ள Yuzhou Xinminsheng கிராம வங்கி (ஹெனான் மாகாணத்தின் Xuchang நகரில் அமைந்துள்ளது), Zhecheng Huanghuai வங்கி (ஷாங்கி நகரம், ஹெனான் மாகாணம்), ஷாங்காய் ஹூமின் கிராமப்புற வங்கி (ஜுமாடியன் நகரம், ஹெனான் மாகாணம்), நியூ ஓரியண்டல் வில்லேஜ் வங்கி (கைஃபெங் நகரம், ஹெனான் மாகாணம்), Huaihe நதி கிராமக் கரை (Bengbu City, Anhui மாகாணம்), Yixian கவுண்டி கிராம வங்கி (Huangshan நகரம், Anhui மாகாணம்) ஆகிய ஆறு வங்கிகள் மக்களின் வைப்பு நிதிகளை முடக்கியுள்ளன.
கலவர பூமியாக மாறிய சீனா:
தங்களது வைப்புநிதியை திரும்பத்தரக்கோரி போராடும் மக்கள் மீது அந்நாட்டு காவல்துறை தடியடி நடத்தியதாகவும் அதில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதை அடுத்து சீனா தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கிறது.