நாட்டில் ஓய்வூதியம் பெறும் 73லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதில் புதிய மாற்றத்தை கொண்டுவருவது குறித்தும் வரும் 29ம் தேதி மற்றும் 30ம் தேதி நடக்கும் இபிஎப்ஓ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
நாட்டில் ஓய்வூதியம் பெறும் 73லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதில் புதிய மாற்றத்தை கொண்டுவருவது குறித்தும் வரும் 29ம் தேதி மற்றும் 30ம் தேதி நடக்கும் இபிஎப்ஓ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதன்படி நாடுமுழுவதும் ஓய்வூதியதாரர்கள் ஒரே நேரத்தில், ஒரே நாளில் ஓய்வூதியம் பெறும் மத்திய ஓய்வூதிய வழங்கல் முறையைக் கொண்டுவருவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்ககப்படலாம் எனத் தெரிகிறது.
நாடுமுழுவதும் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மண்டலங்களில் இருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்காக 138 இபிஎப்ஓ மண்டல அலுவலகங்கள் உள்ளன.ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு மண்டலத்திலும் வெவ்வேறு பட்ட தேதிகளில், நாட்களில்தான் ஓய்வூதியம் பெற முடிகிறது.
இந்நிலைியில் இபிஎப்ஓ மூத்தஅதிகாரி ஒருவர் கூறுகையில் “ ஓய்வூதியதாரர்களுக்கு ஓரே நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும், மண்டல அலுவலகங்கள் வாயிலாக அவர்களுக்கு வெவ்வேறு தேதிகளில்,நாட்களில்தான் கிடைக்கிறது. இதற்காக மத்திய ஓய்வூதிய பகிர்வு முறையை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது.
இது கொண்டுவரப்பட்டால், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் ஒரே நாளில், தேதியில் ஓய்வூதியம் கிடைக்கும். வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கும் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
138 மண்டல இபிஎப்ஓ அலுவலகங்களில் இருந்தும் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் பெறப்பட்டு, ஓய்வூதியதாரர்களின் வங்கிக்கணக்கில் ஒரே நாளில், தேதியில் வழங்கப்படும்.நாடுமுழுவதும் உள்ள ஓய்வூதியதார்கள் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு தேதிகளில் ஓய்வூதியம் ஏன் பெற வேண்டும் என்று இபிஎப்ஓ அமைப்பு நினைக்கிறது” எனத் தெரிவித்தார்.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நடந்த 229வது கூட்டத்தில் இபிஓப்ஓ அமைப்பின் அறங்காவலர்கள் குழு, ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்க ஒப்புதல் அளிக்ககப்பட்டது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியமுறை உருவாக்கப்பட்டால், அனைத்து பிஎப் கணக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, போலியான கணக்குகள் உருவாக்கப்படுவது தடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் வரும் 29,30 தேதிகளில்நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், பிஎப் கணக்கில் டெபாசிட்களை 6 மாதத்துக்குள் குறைவாக டெபாசிட் செய்திருந்தாலோ கணக்குதாரர்கள்எடுக்கும் வசதிக்கு அனுமதி வழங்கலாம் எனத் தெரிகிறது. தற்போது பிஎப் சந்தாதாரர்கள் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள்வரை பங்களிப்பு செய்திருந்தால்தான் பிஎப் கணக்கிலிருந்து பணம்எடுக்க முடியும் என்ற நிலை இருக்கிறது குறிப்பிடத்தக்கது.