itr filing date: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது எப்படி? 12 எளிய வழிமுறைகள்

By Pothy Raj  |  First Published Jul 11, 2022, 2:04 PM IST

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் நேரம் வந்துவிட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ம்தேதி  கடைசித் தேதியாகும். 


வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் நேரம் வந்துவிட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ம்தேதி  கடைசித் தேதியாகும். 

ஒவ்வொரு ஆண்டு வருமான வரி  ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்பதால், இந்த ஆண்டும் நீட்டிக்கப்படலாம். வருமானவரி ரிட்டன் எவ்வாறு தாக்கல் செய்வது?

Tap to resize

Latest Videos

1.    வருவமானவரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login. Fill லாகின் செய்ய வேண்டும். 

2.    உங்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்ட்ை நிரப்பி தொடர வேண்டும்.

3.    பழைய பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் ஃபார்கெட் பாஸ்வேர்ட் கொடுத்து புதிய பாஸ்வேர் பெறலாம். 

4.    இ-ஃபைல் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

5.    ஃபைன் இன்கம்டேக்ஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

6.    அதில் 2021-22ம் ஆண்டுக்கான தாக்கலைத் தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.

7.    ஆன்-லைன் மூலம் தாக்கல் செய்வதை தேர்வு செய்து, தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்வதையும் குறிப்பிட வேண்டும்.

8.    ஐடிஆர்-1 அல்லது ஐடிஆர்-4 இதில் எந்த அடிப்படையில் தாக்கல் செய்யப் போகிறீர்களோ அதைக் கிளிக் செய்து, தொடர வேண்டும்.(மாத ஊதியம் பெறுபவராக இருந்தால் ஐடிஆர்-1)

9.    பைலின் டைப் குறித்து குறி்ப்பிட்டு, 139(1) என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

10.    அசல் ரிட்டனில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும், அதந்பின் வங்கிக் கணக்கு விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

11.    ஆப் லைன் வெரிபிகேஷன் மோடுக்குச் சென்று, நாம் தாக்கல் செய்ய வேண்டிய விண்ணத்தை அட்டாச் ஆப்ஷனில் இணைக்க வேண்டும். 

12.    வெரிபிகேஷேன் ஆப்ஸனை கிளிக் செய்தபின், அடுத்த சில வினாடிகளில் ரிட்டன் பைலாகிவிடும். 
 

click me!