world population day 2022: சீனாவை முந்தும் இந்தியா: 2023ல் உலகிலேயே அதிக மக்கள் தொகை நாடாக மாறும் : ஐ.நா தகவல்

Published : Jul 11, 2022, 12:49 PM IST
world population day 2022: சீனாவை முந்தும் இந்தியா: 2023ல் உலகிலேயே அதிக மக்கள் தொகை நாடாக மாறும் : ஐ.நா தகவல்

சுருக்கம்

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவை 2023ம் ஆண்டில் இந்தியா முறியடிக்கும். 2022ம் ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் உலகின் மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடியாக உயரும் என்று ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவை 2023ம் ஆண்டில் இந்தியா முறியடிக்கும். 2022ம் ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் உலகின் மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடியாக உயரும் என்று ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும், உலக மக்கள் தொகை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. வின், ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விஜய் மல்லையாவுக்கு சிறை; அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

2022ம் ஆண்டு நவம்பர்15ம் தேதி உலகின் மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 1950களில் இருந்து, உலகின் மக்கள் தொகை மிகக்குறைவாக ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வளர்வது இப்போதுதான். சமீபத்திய கணிப்பின்படி, 2030ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 850 கோடியாகவும், 2050ம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும். 2080ம் ஆண்டில் உச்ச கட்டமாக 1004 கோடியை எட்டும். 

உலக மக்கள் தொகை தினமான இன்று, நாம் நம்முடைய வேற்றுமையை, பொதுவான மனிதநேயத்தை, சுகாதாரத்தில் முன்னேறியிருப்பதை, வாழ்நாள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை, பச்சிளங்குழந்தைகள் இறப்பை குறைத்ததை, பேருகாலத்தில் பெண்கள் உயிரிழப்பு ஏற்படுவதை குறைத்ததைக் கொண்டாடுகிறோம்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அலர்ட்! இதைச் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படும்

உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்டாக தற்போது சீனா இருந்து வருகிறது. 2023ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்டநாடாக இந்தியா மாறும். ஆசியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 230 கோடி மக்கள் வாழும் பகுதியாக மாறும். அதாவது உலகின் மக்கள் தொகையில 29 சதவீதம் பேர் இந்தப் பகுதியில் இருபா்கள். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் 210 கோடி மக்கள் வசிப்பார்ள். உலகின் மக்கள் தொகையில் 26சதவீதம் பேர் இங்கு வசிப்பார்கள்.

2022ம் ஆண்டு நிலவரப்படி சீனா 1.4சதவீதம் மக்கள் தொகையுடன் ஆசியாவில் முதலிடத்தில் இருக்கிறது. 2050ம் ஆண்டு வரும்போது, உலகளவில் பாதி மக்கள் தொகையை 8 நாடுகள் வைத்திருக்கும், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியாநாடுகள் கொண்டிருக்கும்.

நடுராத்திரி ஷாப்பிங்ணா இப்படியா!: திருவனந்தபுரம் லூலூ மாலை திணறவைத்த மக்கள்

2022ம் ஆண்டு நிலவரப்படி சீனாவின் மக்கள் தொகை 142.60 கோடியாக இருக்கிறது, இந்தியாவின் மக்கள் தொகை 141.20 கோடியாக இருக்கிறது. 2050ம் ஆண்டில் இந்தியா 166.80 கோடி மக்கள் கொண்ட தேசமாக, உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாகமாறும். 

மக்களின் வாழும்நாட்கள் உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டில் உலக வாழ்நாள் சராசரி 72.80ஆக இருக்கிறது, கடந்த 1990ம் ஆண்டில் இருந்ததைவிட ஏறக்குறைய 9 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. உயிரிழப்பு குறைந்து மனிதன் வாழும் நாட்கள் அளவு உயர்ந்து வருகிறது, 2050ம் ஆண்டில், 77.20 ஆக இது உயரும். ஆனால், வளர்ச்சி குறைந்த நாடுகளில் வாழ்நாள் சராசரி உலக சராசரியைவிட 7ஆண்டுகள் குறைவாக இருக்கிறது.

இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு