vijay mallya: mallya news: விஜய் மல்லையாவுக்கு சிறை; அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Published : Jul 11, 2022, 11:06 AM ISTUpdated : Jul 11, 2022, 11:43 AM IST
 vijay mallya: mallya news:  விஜய் மல்லையாவுக்கு சிறை; அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

சுருக்கம்

வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


2017ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் “ நீதிமன்ற சம்மன் அனுப்பியும், எச்சரிக்கை செய்தும் எந்தவிதமான பதிலும் அளிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது” என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

நடுராத்திரி ஷாப்பிங்ணா இப்படியா!: திருவனந்தபுரம் லூலூ மாலை திணறவைத்த மக்கள்

இந்தியாவில் வங்கிகளில் ரூ.9ஆயிரம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2017ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் நடத்திய கிங்பிஷனர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதால், அவருக்கு எதிராக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

நீதிமன்ற உத்தரவை மீறி ரூ.317 கோடியை விஜய் மல்லையா தனது பிள்ளைகளுக்கு பரிமாற்றம் செய்ததாக எஸ்பிஐ வங்கி வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விஜய் மல்லையாவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மல்லையா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது, அந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

ட்விட்டருக்கு கல்தா ! ஒப்பந்தத்தை ரத்து செய்த எலான் மஸ்க் பாயும் வழக்கு

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்ப்பில், விஜய் மல்லையா ரூ.312 கோடியையும், வட்டியுடன் சேர்த்து வங்கிக்கு 4 வாரத்தில் செலுத்த வேண்டும், அவ்வாறு செலுத்தாவிட்டால், சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என உத்தரவிட்டது.

ஆனால், விஜய் மல்லையா நேரடியாகவோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமோ  ஆஜராகவில்லை, பதிலும் தாக்கல் செய்யவில்லை. மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தண்டனை விவரங்களை கடந்த மார்ச் 10ம் தேதி ஒத்தி வைத்தது.

ஆர்பிஐ தலையிட்டும் சரியும் அந்நியச் செலாவணி கையிருப்பு: என்ன காரணம்

இந்நிலையில் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், “ நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத விஜய் மல்லையா மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. அவர் குற்றவாளி என உறுதியாகிறது. ஆதலால் இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு