மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தைகள் இன்று உற்சாகமாக வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்வுடனும், நிப்டி ஏற்றத்துடனும் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன
மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தைகள் இன்று உற்சாகமாக வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்வுடனும், நிப்டி ஏற்றத்துடனும் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.
கடந்த இரு நாட்களாக சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி, உற்சாகமாக நடந்துவருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்
அமெரிக்க பணவீக்கத்தின் புள்ளிவிவரங்கள் நேற்று வெளியாகின. இதில் எதிர்பார்த்த அளவுக்கு பணவீக்கம் உயரவில்லை, இதனால் அடுத்துவரும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் பெடரல் வங்கி வட்டியை பெரிதாக உயர்த்தாது என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, அமெரிக்கப் பங்குசந்தையும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத ஏற்றத்தை நேற்று அடைந்தது.
அமெரிக்கப் பங்குச்சந்தையின் உயர்வு ஆசியப் பங்குச்சந்தையிலும் இன்று காணப்பட்டது. ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்டநாடுகளின் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தின.
இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் இன்று எதிரொலித்தது. வர்த்தகம் தொடங்கும் முன்பை மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் இருந்தன. வர்தத்கம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 850 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து வர்த்தகத்தை நடத்தியது.
2027ஆம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். ஆர்வத்துடன்பங்குகளை வாங்குவதும், கைமாற்றும் பணியிலும் ஈடுபட்டனர். மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன்பின் சென்செக்ஸ் 983 புள்ளிகளில் , 61,596 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 282 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 18,310 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
நிப்டியில் உள்ள அனைத்து துறைப் பங்குகளும் ஏற்றத்துடன் நகர்கின்றன. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பங்குகள் 3.42% ஏற்றம் கண்டன. வங்கி, நிதிச்சேவை, உலோகம், மருந்துத்துறை, தனியார் வங்கி, ரியல்எஸ்டேட் துறை பங்குகளும் ஏற்றத்துடன் நகர்கின்றன
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று எல்ஐசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, அதானி பவர், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் வர உள்ளது முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பில் வைத்துள்ளது.
ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் முடிந்ததா?மத்திய அரசு புதிய அறிவிப்பு
அமெரி்க்கப் பங்குச்சந்தை உயர்வி்ல் முடிந்ததையடுத்து, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் காலை வர்த்தகத்தில் உயர்ந்தது. 113 காசுகள் உயர்ந்து, ரூ.80.68ஆக உயர்ந்தது. வியாழக்கிழமை வர்த்தகம் முடிவில் டாலருக்கு எதிராக ரூ.81.81 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.