இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 8 நாட்களுக்குப்பின் இன்று ஏற்றத்துடன் முடிந்தன. சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தது.
இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 8 நாட்களுக்குப்பின் இன்று ஏற்றத்துடன் முடிந்தன. சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தது.
அமெரிக்காவின் பொருளாதார மந்தம், பெடரல் ரிசர்வ்வின் வட்டிவீத உயர்வு, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு போன்ற காரணிகள் இருந்தபோதிலும் இந்திய சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.
undefined
பங்குச்சந்தை உயர்வு | சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: உலோகம், வங்கி பங்குகள் லாபம்
சீனாவில் பொருளதாரம் மற்றும் தொழிற்துறை முழுவேகம் பெற்றுள்ளதையடுத்து முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 8 வர்த்தகதினங்களாக பங்குச்சந்தையில் 4 சதவீதம் சரிவு காணப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் 3414 கோடி டாலருக்கு பங்குகளை விற்றுள்ளனர்.
இத்தகைய நெருக்கடியான சூழல்களுக்கு மத்தியிலும் இந்தியச் சந்தைகள் ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை முடித்துள்ளன. காலையில் தொடங்கிய ஏற்றம், மாலை வரை நீடித்தது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 449 புள்ளிகள் அதிகரித்து, 59,411 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 146 புள்ளிகள் உயர்ந்து 17,450 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
மீளாத பங்குச்சந்தை | 7வது நாளாக சென்சென்ஸ், நிப்டி வீழ்ச்சி: அதானி பங்குகள் சரிவு
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் எச்டிஎப்சி வங்கி, பவர்கிரிட் பங்குகளைத் தவிர அனைத்து நிறுவனப் பங்குகளும் லாபத்தில் முடிந்தன.
நிப்டியில் அதானி எண்டர்பிரைசர்ஸ், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், யுபிஎல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி பங்குகள் லாபத்தை அடைந்தன. பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட் கார்ப்பரேஷன், பிபிசிஎல், சிப்லா, எஸ்பிஐ காப்பீடு பங்குகள் சரிவில் முடிந்தன.
நிப்டி துறைகளில் அனைத்து துறைப் பங்குகளும் லாபமீட்டின. உலோகம், பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி, முதலீட்டுப் பொருட்கள், எரிசக்தி, ரியல்எஸ்டேட் துறை 1 முதல் 2சதவீதம்வரை உயர்ந்தன