Gold rate Today: தங்கம் விலை அதிரடி உயர்வு | ஒரேநாளில் சவரனுக்கு ரூ.224 அதிகரிப்பு

By Pothy Raj  |  First Published Mar 1, 2023, 10:51 AM IST

தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.224 அதிகரித்துள்ளது.


தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.224 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 28 ரூபாயும், சவரனுக்கு 224 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

Latest Videos

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,207ஆகவும், சவரன், ரூ.41,656ஆகவும் இருந்தது.

தங்கம் விலை தொடர் வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.632 குறைந்தது: வெள்ளி ரூ.1000 சரிவு

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து ரூ.5,235ஆகவும், சவரனுக்கு 224 ரூபாய் ஏற்றம் கண்டு ரூ.41 ஆயிரத்து 880ஆக உயர்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,235க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை மளமளச் சரிவு| சவரனுக்கு ரூ.360 குறைந்தது: நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்தவாரம் முழுவதும் குறைந்திருந்தது, இந்த விலைக் குறைவு இந்தவாரத்தின் தொடக்கத்திலும் குறைந்தநிலையில் நேற்று முதல் மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்கிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் இரு நாட்களில் சவரனுக்கு  272 ரூபாய் அதிகரித்துள்ளது நடுத்தர மக்களுக்கும், நகைப் பிரியர்களுக்கும் ஆறுதலாகவும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.69.20 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ.70.20 ஆகவும், கிலோ ரூ.69,200 ஆக இருந்தநிலையில் கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து, ரூ.70,200 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது
 

click me!