சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களில் உயர்ந்து வந்தது. பின்னர், மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வீட்டு உபயோக கேஸ் உயர்த்தாமல் ஒரே விலையிலேயே நீடித்து வந்தது.
undefined
இந்நிலையில், 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ரூ.50 உயர்ந்து ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2,2268 விற்பனை செய்யப்படுகிறது.