Share Market Today: உற்சாகத்தில் பங்குச்சந்தை!சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு:Nifty எழுச்சி:HDFC லாபம்

By Pothy RajFirst Published Jan 18, 2023, 3:52 PM IST
Highlights

மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக உயர்வுடன் இன்று முடிந்தன. நிப்டி மீண்டும் 18ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக உயர்வுடன் இன்று முடிந்தன. நிப்டி மீண்டும் 18ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வதுநாளாக இன்றும் உயர்ந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம், கடந்த 6 மாதங்களாக பங்குகளை சந்தையில்விற்று முதலீட்டை திரும்ப எடுத்துவந்த அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க தொடங்கியுள்ளனர். 

இது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மாற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் நேற்று மட்டும் 211 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023-ல் உலகப் பொருளாதார மந்தநிலை; இந்தியாவுக்கு சாதகம்: உலக பொருளாதார மன்ற சர்வேயில் தகவல்

கடந்த டிசம்பர் 23ம் தேதியிலிருந்து 302 கோடி டாலர் முதலீட்டை வெளியே எடுத்த முதலீட்டாளர்கள் பங்குகளை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பங்குச்சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு அதிகமாக பங்குகளை வாங்கத் தொடங்கியதால், காலைமுதலே ஏற்றம் காணப்பட்டது. 

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து, 61,045 புள்ளிகளுடன் ஏற்றத்துடன் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 112 புள்ளிகள் ஏற்றத்துடன் 18,165 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது

பங்குச்சந்தை தொடர் உயர்வு: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்! உலோகப் பங்கு லாபம்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 23 நிறுவனப் பங்குகள் லாபத்துடன் உள்ளன, 7 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் முடிந்தன. ரிலையன்ஸ், எஸ்பிஐ காப்பீடு, பஜாஜ்பின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, இன்ட்ஸ்இன்ட்வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட்,  டாடா மோட்டார்ஸ், பங்குகள் சரிவில் முடிந்தன.

நிப்டியில் ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், லார்சன் அன்ட் டூப்ரோ, யுபிஎல், ஹெச்டிஎப்சி, பங்குகள் லாபத்தில் முடிந்தன. டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி லைப், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி என்டர்பிரைசஸ், பிபிசிஎல் பங்குகள் சரிவில் முடிந்தன

click me!