Share Market Live Today: பங்குச்சந்தை தொடர் உயர்வு: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்! உலோகப் பங்கு லாபம்

By Pothy RajFirst Published Jan 18, 2023, 10:02 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக உயர்வுடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. உலோகப் பங்குகள் ஆர்வத்துடன் வாங்கப்பட்டு வருகின்றன

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக உயர்வுடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. உலோகப் பங்குகள் ஆர்வத்துடன் வாங்கப்பட்டு வருகின்றன

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை வரலாம் என்று உலகப் பொருளாதார மன்றம் எச்சரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் உள்நாட்டு காரணிகள் வலுவாக இருப்பதால், வெளிப்புறக் காரணிகளால் பாதிக்கப்படாததால் வர்த்தகம் கடந்த இரு நாட்களாக சாதகமாகவே இருந்து வருகிறது.

சீனாவில் 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தாலும், அது இந்தியச் சந்தையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. சீனப் பொருளாதாரம் மீண்டும் உலக நாடுகளுக்கு திறந்துவிடப்பட்டதும் ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 1ம் தேதி பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது, அதன் தாக்கம், எதிர்பார்ப்புகள் அதிகமாக பங்குச்சந்தையில் உள்ளன. இதனால் பங்குச்சந்தையில் இன்றும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் ஏற்றத்துடன் வர்த்தகம் நகர்ந்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து, 60,804 புள்ளிகளுடன் வர்தத்கத்தில் ஈடுபட்டு வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 44 புள்ளிகள் ஏற்றத்துடன் 18,097 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 23 நிறுவனப் பங்குகள் லாபத்துடன் உள்ளன, 7 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன. அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, எச்டிஎப்சி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவில் உள்ளன.

நிப்டியில், தகவல்தொழில்நுட்பம், உலோகம், மருந்துத்துறை, தனியார் வங்கி, எப்எம்சிஜி,நிதிச்சேவை ஆகிய துறைப் பங்குகள் லாபத்தில் உள்ளன. ஆட்டோமொபைல், ரியல்எஸ்டேட்,பொதுத்துறை வங்கித்துறை பங்குகள் சரிவில் உள்ளன.

click me!