Share Market Today: காளை முதுகில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் ஜோர்! 18,000 புள்ளிகளில் நிப்டி: HUL லாபம்

By Pothy RajFirst Published Jan 17, 2023, 3:53 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி, உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி, உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன.

சர்வதேச காரணிகள் பாதகமாக இருந்தபோதிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து அறிக்கை வெளியான போதிலும், இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன.

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஜோர்: கவனிக்க வேண்டிய பங்குகள்

தொடர்ந்து 2வது நாளாக இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. உள்நாட்டில் டிசம்பர் மாத சில்லறைப் பணவீக்கம் குறைந்தது, விண்ட்பால் வரியை அரசு குறைத்தது போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினன.

டாவோஸில் நடந்துவரும் உலகப் பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்ட ஆய்வரிக்கையில் 2023ம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை வரும் என்று தெரிவிக்கப்பட்டபோதிலும் அது இந்தியாவில் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.சீனாவின் கடைசி காலாண்டு பொருளாதார வளர்ச்சி 50 ஆண்டுகளில் இல்லாத அளவுகுறைந்து 2.9 சதவீதமாக சரிந்த தகவலும் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

50 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனப் பொருளாதார வளர்ச்சி 2022ம் ஆண்டில் சரிந்தது

இருப்பினும் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது மட்டும் தொடர்ந்து 6வது மாதமாக நீடித்து வருகிறது கவலைக்குரியதாகும்.ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆதரவு வலுவான வர்த்தகத்தை அளித்ததால் சந்தையில் உயர்ந்து தொடர்ந்தது.

காலையில் ஏற்றத்துடன் தொடங்கி மும்பை , தேசியப் பங்குச்சந்தை மாலை வரை தக்கவைத்தன. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 562 புள்ளிகள் உயர்ந்து, 60,655 புள்ளிகளில் வர்த்தக்கத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 158 புள்ளிகள் அதிகரித்து, 18,053 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் லாபத்திலும், 8 நிறுவனப் பங்குகள் சரிவிலும் முடிந்தன.

நிப்டியில் லார்சன் அன்ட் டூப்ரோ, எச்யுஎல், எச்டிஎப்சி, எச்சிஎல் டெக்னாலஜிஸ்  ஆகிய  பங்குகள் விலை உயர்ந்தன. எஸ்பிஐ, இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ் பின்சர்வ், விப்ரோ, டாடா ஸ்டீல் பங்குகள் மதிப்பு குறைந்தது. 

நிப்டியில் ரியல்எஸ்டேட், எரிசக்தி, கட்டுமானம், மின்சாரம், முதலீட்டுப் பொருட்கள், எப்எம்சிஜி ஆகிய துறைகள் ஒரு சதவீதம் உயர்ந்தன, பொதுத்துறை வங்கிப் பங்கு 2 சதவீதம் சரிந்தது


 

click me!