Recession:தேசத்திடம் பிரதமர் மோடியும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் எதை மறைக்கிறார்கள்? காங்கிரஸ் கேள்வி

By Pothy Raj  |  First Published Jan 17, 2023, 1:07 PM IST

ஜூன் மாதத்துக்குப்பின் இந்தியாவில் பொருளாதார மந்தநிலைவரக்கூடும் என்று மத்திய அமைச்சர் நாராயன் ரானே தெரிவித்ததையடுத்து, பிரதமர் மோடியும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தத் தேசத்தின் மக்களிடம் எதை மறைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.


ஜூன் மாதத்துக்குப்பின் இந்தியாவில் பொருளாதார மந்தநிலைவரக்கூடும் என்று மத்திய அமைச்சர் நாராயன் ரானே தெரிவித்ததையடுத்து, பிரதமர் மோடியும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தத் தேசத்தின் மக்களிடம் எதை மறைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயன் ரானே நேற்று புனேயில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். 

Tap to resize

Latest Videos

ராகுல் காந்தி பாரத் ஜோடோ பயணத்தில் அத்துமீறல்! பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் பாய்ந்தார்

அப்போது அவர் கூறுகையில் “நான் அமைச்சரவையில் இருக்கிறேன். பிரதமர் மோடியிடம் எங்களுக்கு கிடைக்கும் அறிவுரைகள் எங்களுக்கும் அறிவுறுத்தப்படும். அந்த வகையில், வளர்ந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது, உண்மைதான். 

ஒருவேளை பொருளாதார மந்தநிலை வந்தால் ஜூன் மாதத்துக்குப்பின் வரக்கூடும். இந்த பொருளாதார மந்தநிலையில் இருந்து இந்தியா பாதிக்கப்படாமல் உறுதி  செய்ய அல்லது தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வளர்ந்த நாடுகள் ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகின்றன” எனத் தெரிவித்திருந்தார்

இனி எந்தத் தேர்தலிலும் தோற்கக் கூடாது: பாஜக தலைவர் நட்டா உறுதி

மத்திய அமைச்சர் நாராயன் ரானேயின் பேச்சைக் குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 2014ல் இருந்து பொருளாதாரத்தைச் சிதைத்து வரும் மத்திய அரச, மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைஅமைச்சர் நாராயன் ராணே, அடுத்த 6 மாதங்களில் இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் நாராயண் ரானே இதைத் தெரிவித்துள்ளார். இந்ததேசத்தின் மக்களிடம் இருந்து பிரதமர் மோடியும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் எதை மறைக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

click me!