2022ம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதஅளவு 4வது காலாண்டில் மோசமாகச் சரிந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய புள்ளிலியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதஅளவு 4வது காலாண்டில் மோசமாகச் சரிந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய புள்ளிலியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1976ம் ஆண்டுக்குப்பின் சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
சீனாவின் பொருளாதாரம், 2022, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 4வது காலாண்டில் 2.9% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் சீனா அடைந்த மிக மோசமான பொருளாதார வளர்ச்சியாகும். சீனாவில் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார நடவடிக்கை முடங்கியதால், பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டுள்ளது.
2022ம்ஆண்டின் 3வது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி3.9 சதவீதமாக இருந்தது, அதைவிட 4வது காலாண்டில் சரிந்து 2.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு காலாண்டாகக் கணக்கிடும்போது, 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பித்துள்ளது.
2022ம் ஆண்டில் சீனா பொருளாதார வளர்ச்சி இலக்காக 5.5 சதவீதம் வைத்திருந்தது. ஆனால், அந்த இலக்கை சீனா இந்த ஆண்டு அடையமுடியவில்லை. 2021ம் ஆண்டில் சீனா பொருளாதார வளர்ச்சி இலக்காக 8.4 சதவீதம் நிர்ணயித்திருந்தது.
2020ம் ஆண்டு கொரோனா தொற்று முதன்முதலாக சீனாவில் பரவியபோது அந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி 2.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. அதன்பின், 2வது முறையாக 2022ம் ஆண்டு 4வது காலாண்டில் 2.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து விளாடிமிர் புதின் விலக முடிவு? புதிய அதிபர் யார்?
2022ம் ஆண்டில் சீனாவின் ஜிடிபி மதிப்பு 17.94 லட்சம் கோடி டாலராகும். 5.5 சதவீதம் என்ற அதிகாரப்பூர்வ இலக்கை அடையமுடியாமல் பொருளாதார வளர்ச்சி சரிந்தது என்று தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டுவந்த லாக்டவுன், கட்டுப்பாடுகளால் பொருளாதார நடவடிக்கை சுருங்கி இருந்தது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியும் வேகமாக இல்லாமல் மந்தமாகவே இருந்தது. இதுதான் சீனாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது
2021ம் ஆண்டில் சீனாவின் ஜிடிபி 18 லட்சம் கோடி டாலர்களாக இருந்தது, ஆனால் 2022ல் 17.94 லட்சம் கோடி டாலர்களாகக் குறைந்துவிட்டது.
உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும்: 73 சதவீத சிஇஓ-க்கள் எதிர்பார்ப்பு
சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் தொழிற்துறை முக்கியப் பங்குவகிக்கும். 2022ல் தொழிற்துறை உற்பத்தி 3.6 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது, அதிலும் டிசம்பர் மாதத்தில் 1.3 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. 2022ல் முதலீடும் 5.1 சதவீதம் அளவுதான் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த நிலையான பொருளாதார செயல்திறன் இருந்தாலும், பொருளாதார மீட்சிக்கான அடித்தளம் நிலையற்றதாக உள்ளதுஎன தேசிய புள்ளியியல் அமைப்புத் தெரிவித்துள்ளது.
சீனாவில் வேலையின்மை அளவும் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நவம்பரில் 5.7 சதவீதமாக இருந்த வேலையின்மை டிசம்பரில் 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும் 5 பேரில் ஒருவர் வேலையில்லாதவரே இருந்தனர்.
2023-ல் உலகப் பொருளாதார மந்தநிலை; இந்தியாவுக்கு சாதகம்: உலக பொருளாதார மன்ற சர்வேயில் தகவல்
ஆனால், தேசிய புள்ளிளியியல் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி 2022ம் ஆண்டில் சீனாவில் வேலைவாய்ப்பு நிலவரம் நிலையாகவே இருந்தது எனத் தெரிவித்துள்ளது. கடந்த 2022ல் 12.06 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன, ஆனால், 11 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்க வைத்திருந்த இலக்கைவிட இது அதிகம்தான் எனத் தெரிவித்துள்ளது