
தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து 2வது நாளாக இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி உற்சாகமாக உயர்ந்து வருகின்றன.
அமெரிக்காவில் நவம்பர் மாத பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிட குறைவாக உயர்ந்துள்ளது, அதாவது 7.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி இன்று நடக்கும் கூட்டத்தில் 50 புள்ளிகளுக்கு மேல் வட்டியை உயர்த்தவாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது.
மறந்துடாதிங்க! பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை
இதனால் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியில் இருந்த தகவல் தொழில்நுட்பப் பங்குகளும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் நவம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கமும் 6 சதவீதத்துக்குள் வந்துள்ளதால், முதலீட்டாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நிப்டியில் பொதுத்துறை வங்கி பங்குகள் காலை வர்த்தகம் தொடங்கியது முதல் லாபத்தில் செல்கின்றன. ஹெச்டிஎப்சி டிவின்ஸ் பங்குகளும் லாபத்தில் உள்ளன
மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியதும் ஏற்றத்துடன் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்து, 62,762 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 69 புள்ளிகள் அதிகரி்த்து, 18,677 புள்ளிகளுடன் நகர்ந்து வருகிறது.
பங்குச்சந்தை கடும் ஊசலாட்டம்: சென்செக்ஸ் சரிவு: நிப்டி உயர்வு: PSU வங்கி பங்குகள் லாபம்
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 4 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிந்துள்ளன மற்ற 26 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் உள்ளன. ஐடிசி, பார்திஏர்டெல், ஹெச்யுஎல், நெஸ்ட்லேஇந்தியா ஆகிய பங்குகள் மட்டுமே சரிந்துள்ளன.
நிப்டியில் தகவல்தொழில்நுட்பப் பங்குகள் 1.14 சதவீதம் உயர்ந்துள்ளது, அதைத் தொடர்ந்து ஊடகம் 1.02%, உலோகம் 0.75%, மருந்துத்துறை 0.33%, நிதிச்சேவை 0.35%, ஆட்டோமொபைல் 0.38% சதவீதம் என லாபத்தோடு நகர்கின்றன
ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி 18,500க்கு மேல் உயர்வு: PSU வங்கி பங்கு லாபம்
நிப்டியில் ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எய்ச்சர் மோட்டார்ஸ், டெக் மகிந்திரா, கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் லாபத்தில் உள்ளன, பார்தி ஏர்டெல், ஹெச்யுஎல், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி பங்குகள் சரிவில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.