Share Market Today: பங்குச்சந்தையில் கரைபுரளும் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்வு

By Pothy RajFirst Published Dec 13, 2022, 3:55 PM IST
Highlights

தொடர்ந்து 2 நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்ட நிலையில், இன்று  மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.

தொடர்ந்து 2 நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்ட நிலையில், இன்று  மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.
சென்செக்ஸ் 403 புள்ளிகளும், நிப்டி 110 புள்ளிகளும் உயர்ந்த நிலையில் முடிந்தன

இந்தியாவில் நவம்பர் மாத சில்லறைப் பணவீக்கம் முதல்முறையாக இந்த ஆண்டில் 6 சதவீதத்துக்குள் வந்தது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவுக்குள் வந்தது. பல்வேறு சந்தை நிறுவனங்கள் பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் இருக்கும் எனக் கணித்த நிலையில் 5.88 சதவீதமாக பணவீக்கம் குறைந்தது, முதலீட்டாளர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளித்தது. 

https://tamil.asianetnews.com/business/sensex-falls-450-points-nifty50-falls-below-18-400-it-index-dips-rmrfyp

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு தானியங்கள் விலை குறைந்துள்ளது, பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் இருப்பதும் விலைவாசி உயர்வு குறைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று. இது முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்து பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் சந்தையில்  ஏற்றம் இருந்தது.

ஆனால், இன்று இரவு அமெரிக்காவில் பணவீக்கம் விவரம் வெளியாகிறது இதை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளார். இந்த பணவீக்கமும் குறைந்திருந்தால், நாளை சந்தையில் ஏற்றம்தொடர்ந்து இருக்கும். 

பங்குச்சந்தையில் ஆரம்பமே அதிர்ச்சி: சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிட குறைந்ததுதான் சாதகமான போக்கை ஏற்படுத்தி, இந்தியச் சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்க காரணமாக இருந்தன.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் காலை 150 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கி, அதை மாலை வரை தக்கவைத்தது. குறிப்பாக பொதுத்துறை வங்கிப்பங்குகள் உயர்வுக்கு காரணமாக அமைந்தன.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்து, 62,533 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 110 புள்ளிகள் அதிகரி்த்து, 18,608 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. 

நிப்டியில் பொதுத்துறை வங்கிப் பங்குகள் 4 சதவீதம் வரை அதிகரித்தன, தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் ஒரு சதவீதம் உயர்ந்தன. ரியல்எஸ்டேட் பங்குகள் ஒரு சதவீதம் சரி்ந்தது.

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி 18,500க்கு மேல் உயர்வு: PSU வங்கி பங்கு லாபம்

நிப்டியில் இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜி, இன்போசிஸ் பங்குகள் அதிக லாபமடைந்தன. அப்பல்லோ மருத்துவமனை, ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், பிபிசிஎல், யுபிஎல், நெஸ்ட்லே இந்தியா பங்கு விலை குறைந்தன

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 6 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தன, மற்ற 24 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. ஹெச்யுஎல், டாக்டர்ரெட்டீஸ், டைட்டன், மாருதி, டாடாஸ்டீல், நெஸ்ட்லேஇந்தியா பங்குகள் விலை சரிந்தன

click me!