தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்திருந்தும் பெரிதாக ஆறுதல் அளிக்கும் வகையில் விலைக் குறைவு இல்லை. சவரன் தொடர்ந்து ரூ.40ஆயிரத்துக்கு மேல்தான் இருக்கிறது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்திருந்தும் பெரிதாக ஆறுதல் அளிக்கும் வகையில் விலைக் குறைவு இல்லை. சவரன் தொடர்ந்து ரூ.40ஆயிரத்துக்கு மேல்தான் இருக்கிறது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை குறைந்துள்ளது. இரு நாட்களில் சேர்த்து 120 ரூபாய் சவரனுக்கு குறைந்துள்ளது.
தங்கம் விலை குறைந்தும் மகிழ்ச்சியில்லை! இன்றை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,045ஆகவும், சவரன், ரூ.40,360ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.5,040 ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.40 ஆயிரத்து 320ஆக வீழ்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,040க்கு விற்கப்படுகிறது.
மறந்துடாதிங்க! பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை
தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. ஆனாலும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் ஆறுதல் அளி்க்கும் வகையில் இல்லை.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை அதிக அளவில் உயர்த்துமா அல்லது குறைவாக உயர்த்துமா என்ற பதற்றத்தால் முதலீட்டாளர்கள் ஊசலாட்ட மனநிலையுடன் உள்ளனர். பெடரல் ரிசர்வ் வங்கியின் 2 நாள் நிதிக்கொள்ளைக் கூட்டம் இன்று கூடுகிறது. இந்தத் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து தங்கத்தின் விலையில் தாக்கம் இருக்கும்
தங்கம் விலை மீண்டும் உச்சம்! வெள்ளி கிலோ ரூ.1000க்கு மேல் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா உயர்ந்து, ரூ.73.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 சரிந்து, ரூ.73,000 ஆக ஏற்றம் கண்டுள்ளது