Share Market Today: பங்குச்சந்தை கடும் ஊசலாட்டம்: சென்செக்ஸ் சரிவு: நிப்டி உயர்வு: PSU வங்கி பங்குகள் லாபம்

By Pothy RajFirst Published Dec 12, 2022, 3:54 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று கடும் ஊசலாட்டம் காணப்பட்டது. சென்செக்ஸ் உயர்ந்தநிலையில் முடிந்தது, நிப்டி சரிந்தது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று கடும் ஊசலாட்டம் காணப்பட்டது. சென்செக்ஸ் உயர்ந்தநிலையில் முடிந்தது, நிப்டி சரிந்தது.

கடந்த வாரத்தில் பெரும்பாலான நாட்கள் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தின் முதல்நாளான இன்றும் சரிந்துள்ளது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்து வருவதால், இந்த சரிவு தொடர்ந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரி்க்கப் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தது. இதன் எதிரொலி ஆசியச் சந்தையிலும், இந்தியச் சந்தையிலும் எதிரொலிப்பதால் இன்று வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது. 

பங்குச்சந்தையில் ஆரம்பமே அதிர்ச்சி: சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

அது மட்டுமல்லாமல்,  நவம்பர் மாத சில்லறை பணவீக்கம் குறித்தபுள்ளிவிவரங்கள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் எச்சரி்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால், வாங்குவதை விற்பதிலேயே ஆர்வம்காட்டினர்.  இது தவிர அக்டோபர் மாதஉற்பத்தி நிலவரம் குறித்த புள்ளி விவரங்களும் இன்று வெளியாக உள்ளன. 

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பையும் வெளியிடுகிறது. இதனால் வட்டிவீதம் உயருமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் பங்குகில் முதலீடு செய்யாமல், லாபநோக்கம் கருதி எச்சரிக்கையாக பங்குகளை விற்று வருகிறார்கள். 

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு

இதனால்தான் இன்று காலை முதல் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே சரிவலிருந்து மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் மீண்டன. ஆனாலும் அந்த மீட்சி எதிர்பார்த்த அளவு இல்லை. தகவல் தொழில்நுட்ப பங்குகள் கடுமையாகச் சரிந்ததால், எதிர்பார்த்த அளவு மும்பை பங்குசந்தையில் புள்ளிகள் மீண்டு எழவில்லை.

மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 51 புள்ளிகள் குறைந்து, 62,130 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி ஒரு புள்ளி உயர்ந்து, 18,497 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், 14 நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன, 16 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. எல்ஐசி நிறுவனம் 4 சதவீதம் உயர்வைப் பெற்றது. இன்போசிஸ், விப்ரோ, டைட்டன், ஹெச்சிஎல் பங்குகள் ஒரு சதவீதத்துக்கு அதிகமாகச் சரிந்தன.

RBI எபெக்ட்! கரடியின் பிடியில் பங்குச்சந்தை! தொடர் சரிவில் சென்செக்ஸ், நிப்டி

நிப்டியில் ஊடகத்துறை, பொதுத்துறை வங்கிப் பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்தநிலையில் முடிந்தன. எப்எம்சிஜி, தகவல்தொழில்நுட்ப பங்குகள் 0.2 சதவீதம் வரை சரிந்தன. நிப்டியில் ஏசியன் பெயின்ட்ஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், டைட்டன், கோடக் மகிந்திரா பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன. பிபிசிஎல், திவிஸ் ஆய்வகம், கோல் இந்தியா, அப்பலோ மருத்துவமனை, யுபிஎல் பங்குகள் லாபத்தில் முடிந்தன. 

click me!