Sula Vineyards: சுலா ஒயின்யார்ட் நிறுவனம் இன்று ஐபிஓ வெளியீடு: ஒரு பங்கு விலை என்ன தெரியுமா?

By Pothy RajFirst Published Dec 12, 2022, 11:09 AM IST
Highlights

இந்தியாவின் மிகப்பெரிய ஒயின் தயாரிப்பு நிறுவனமான, சுலா ஒயின்வாட் லிமிடட் நிறுவனம் இன்று முதல் ஐபிஓ வெளியிடுகிறது. வரும் 14ம் தேதி பங்குகளை வாங்க கடைசித் தேதியாகும்.

இந்தியாவின் மிகப்பெரிய ஒயின் தயாரிப்பு நிறுவனமான, சுலா ஒயின்வாட் லிமிடட் நிறுவனம் இன்று முதல் ஐபிஓ வெளியிடுகிறது. வரும் 14ம் தேதி பங்குகளை வாங்க கடைசித் தேதியாகும்.

இந்திய ஓயின் துறையில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனமா சுலா ஒயின் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. ஓயின் உற்பத்தி, விற்பனை, வருவாய் அனைத்திலும் சுலா ஒயின் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.

பங்குச்சந்தையில் ஆரம்பமே அதிர்ச்சி: சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

திராட்சை ஒயின் பிரிவில் கடந்த 2009ல் 33 சதவீதம் சந்தையை கைப்பற்றியிருந்த சுலா ஒயின் நிறுவனம் தற்போது 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. எலைட்(ரூ.950), ப்ரீமியம்(ரூ.700 முதல் ரூ.950), எகானமி(ரூ.400 முதல் ரூ.700), பாப்புலர்(ரூ.400க்கு கீழ்) ஆகிய பிரிவில் ஒயின்களை தயாரித்து வருகிறது. எலைட், பிரிமியம் பிரிவில் 61 சதவீத பங்குகளை சுலா ஒயின் நிறுவனம் வைத்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் நிர்மலா சீதாராமன் 5-வதுமுறையாக இடம் பிடித்தார்

சுலா ஒயின் நிறுவனம் இன்று பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு, ரூ.960 கோடி திரட்ட உள்ளது. இதற்காக 2.69 கோடி பங்குகளை சுலா ஒயின் நிறுவனம் விற்க இருக்கிறது. ஒவ்வொரு பங்கின் விலையும் ரூ.340 முதல் ரூ.357ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சுலா ஒயின் நிறுவனத்தின் ஐபிஓ விற்பனை இன்று தொடங்கி, வரும் 14ம் தேதி முடிகிறது வரும் 22ம் தேதி பங்குச்சந்தையில் பங்குகளை பட்டியலிடுகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு கடந்த 9ம் தேதி ஐபிஓ வெளியிடப்பட்டு, அதன் மூலம் ரூ.288.10 கோடி திரட்டப்பட்டுள்ளது, ஆங்கர் முதலீட்டாளர்களுக்காக 80.70 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டன.  

சுலா ஒயின் நிறுவனத்தின் பங்குகளுக்கு கிரே மார்க்கெட்டிலும் நல்ல விலைஇருக்கிறது. ஒரு பங்கின் விலை ரூ.340 முதல் ரூ.357 என்று நிலையான விலையில் இருக்கும் நிலையில் கிரே மார்க்கெட்டில் ரூ.40அதிகமாக விற்கப்படுகிறது.

ஐபிஓ விற்பனை முடிந்து, வரும் 19ம் தேதி பங்குகள் ஒதுக்கீடு பங்குதாரர்களுக்கு செய்யப்படும், 22ம் தேதி முதல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என சுலா ஒயின்யார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு முதலீட்டாளர் ஒரு லாட்டிலும், சில்லறை முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 13 லாட்டிலும் ஐபிஓ வாங்க விண்ணப்பிக்கலாம். ஒரு லாட் என்பது 42 பங்குகளை கொண்ட தொகுப்பாகும். 

click me!