Share Market Today: பங்குச்சந்தையில் ஆரம்பமே அதிர்ச்சி: சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

By Pothy RajFirst Published Dec 12, 2022, 9:48 AM IST
Highlights

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று மும்ப மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்தது.

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று மும்ப மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்தது.

கடந்த வாரத்தில் பெரும்பாலான நாட்கள் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தின் முதல்நாளான இன்றும் சரிந்துள்ளது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்து வருவதால், இந்த சரிவு தொடர்ந்து வருகிறது.

பங்குச்சந்தையை பங்கம் செய்த கரடி! சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

கடந்த வெள்ளிக்கிழமை அமெரி்க்கப் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தது. இதன் எதிரொலி ஆசியச் சந்தையிலும், இந்தியச் சந்தையிலும் எதிரொலிப்பதால் இன்று வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. 

இது தவிர நவம்பர் மாத சில்லறை பணவீக்கம் குறித்தபுள்ளிவிவரங்கள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் காத்திருக்கிறாரக்ள். அக்டோபர் மாதஉற்பத்தி நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களும் வெளியாக உள்ளன. 

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியும், இன்று விலைவாசி குறித்த கருத்தையும், வட்டிவீதத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பையும் வெளியிடுகிறது. இதனால் வட்டிவீதம் உயருமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் பங்குகில் முதலீடு செய்யாமல், லாபநோக்கம் கருதி எச்சரிக்கையாக பங்குகளை விற்று வருகிறார்கள். இதனால்தான் இன்று காலை முதல் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.

RBI எபெக்ட்! கரடியின் பிடியில் பங்குச்சந்தை! தொடர் சரிவில் சென்செக்ஸ், நிப்டி

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 431 புள்ளிகள் குறைந்து, 61,750 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 122 புள்ளிகள் சரிந்து, 18,374 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 25 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன. மகிந்திரா அன்ட் மகிந்திரா, டாக்டர் ரெட்டீஸ், ஐடிசி, இன்டஸ்இன்ட் வங்கி, நெஸ்ட்லேஇந்தியா ப ங்குகள் மட்டும் லாபத்தில் உள்ளன. இன்போசிஸ், ஹெச்சிஎல் பங்குகள் 2 சதவீதம் சரிந்தன.

நிப்டியில், இன்பேசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, பஜாஜ் பின்சர்வ் பங்குகள் மதிப்பு குறைந்துள்ளது. கோல் இந்தியா, இன்டஸ்இன்ட் வங்கி, மகிந்திரா மகிந்திரா, கிராஸிம்இன்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி பங்குகள் லாபமீட்டி வருகின்றன

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு

நிப்டியில் எப்எம்சிஜி, ஊடகத்துறை பங்குகள் மட்டும் உயர்ந்துள்ளன. தகவல்தொழில்நுட்பம் 1.49 சதவீதம் சரிந்துள்ளது அதைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் 1.04, பொதுத்துறை வங்கி, மருந்துத்துறை, நிதிச்சேவை, ஆட்டோமொபைல் துறை பங்குகளும் சரிந்துள்ளன

click me!