Share Market Today: பங்குச்சந்தையை பங்கம் செய்த கரடி! சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

By Pothy RajFirst Published Dec 9, 2022, 3:53 PM IST
Highlights

வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிப்டி 18,500 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தன

வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிப்டி 18,500 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தன

சர்வதேச காரணிகள் சாதகமாக இருந்தது, ஆசிய, அமெரிக்கப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது போன்றவை இந்தியச் சந்தையிலும் எதிரொலித்ததால் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆனால், இந்த உயர்வு நீண்டநேரம் நிலைக்கவில்லை. 

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்ற தகவலால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்தனர். இதனால் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்கும் முடிவில் இறங்கினார் பங்குகள் தொடர்ந்து விற்கப்பட்டதால், சந்தையில் சரிவு தொடர்ந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பையும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கையாக முதலீட்டை தவிர்த்து பங்குகளை விற்று லாபம் பார்த்தனர். இதனால் வர்த்தகத்தின் கடைசிவரை சரிவு தொடர்ந்தது.

ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்! ஓர் பார்வை

மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து, 62,181 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 112 புள்ளிகள் வீழ்ந்து, 18,496 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்து மீண்டும் 18,500 புள்ளிகளுக்கு கீழ் வந்தது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், 12 நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன மற்றவை இழப்பில் முடிந்தன. நெஸ்ட்லே, சன்பார்மா, டைட்டன், ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ், ஹெச்டிஎப்சி, ஏசியன்பெயிட்ஸ், பார்திஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தன. 

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி 6 ஆண்டுகளாக உயர்கிறது! நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

நிப்டியில் ஹெச்சிஎல், டெக்மகிந்திரா, இன்போசிஸ், விப்ரோ, ஹின்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. நெஸ்ட்லே இந்தியா, சன்பார்மா, டாக்டர் ரெட்டீஸ், டைட்டன், எய்ச்சர் மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் லாபமடைந்தன.

நிப்டியில் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 3 சதவீதம் சரிந்தன. பொதுத்துறை பங்கு, ரியல்எஸ்டேட், எப்எம்சிஜி ஆகிய பங்குகள் உயர்ந்தன


 

click me!