Share Market Today: பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு

By Pothy Raj  |  First Published Dec 9, 2022, 9:56 AM IST

வார வர்த்தகத்தின் கடைசி வர்த்தகதினமான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. பேடிஎம் பங்கு 5 சதவீதம் உயர்ந்துள்ளது.


வார வர்த்தகத்தின் கடைசி வர்த்தகதினமான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. பேடிஎம் பங்கு 5 சதவீதம் உயர்ந்துள்ளது.

சர்வதேச காரணிகள் சாதகமாக இருந்தது, ஆசிய, அமெரிக்கப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது போன்றவை இந்தியச் சந்தையிலும் எதிரொலித்ததால் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. 

Tap to resize

Latest Videos

RBI எபெக்ட்! கரடியின் பிடியில் பங்குச்சந்தை! தொடர் சரிவில் சென்செக்ஸ், நிப்டி

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு காட்டப்பட்டதையடுத்து, அங்கு பொருளாதாரம் மீட்சிப்பாதைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் தெரிகின்றன. இதனால் நம்பிக்கையடைந்து ஆசிய பங்குச்சந்தையிலும் உயர்வு காணப்பட்டது. அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பையும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 37 புள்ளிகளும் உயர்ந்தன. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 11 புள்ளிகளில்,65,582 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 11 புள்ளிகளில் 18,621 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் நிர்மலா சீதாராமன் 5-வதுமுறையாக இடம் பிடித்தார்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், இன்போசிஸ், டெக்மகிந்திரா, ஹெச்சிஎல் நிறுவனங்களின் பங்குகளைத் தவிர மற்ற நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் உள்ளன. இந்த 3 நிறுவனப் பங்குகளும் இழப்பில் உள்ளன. பேடிஎம் பங்கு மதிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது, ஹெச்சிஎல்  பங்கு மதிப்பு 4 சதவீதம் குறைந்துள்ளது.

நிப்டியில் டாடா ஸ்டீல், ஹெச்யுஎல், இன்டஸ்இன்ட்வங்கி, கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன. ஹெச்சிஎல் பங்கு மதிப்பு குறைந்தது. டெக்மகிந்திரா, அப்பலோ மருத்துவமனை, இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி பங்கு மதிப்பு குறைந்தது.

ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்! ஓர் பார்வை

நிப்டியில் தகவல் தொழில்நுட்ப பங்குகள் மதிப்பு 0.27 சதவீதம் குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கி பங்குகள் மதிப்பு 0.84%,  மருந்துத்துறை 0.35%, எப்எம்சிஜி 0.64%, ஆட்டோமொபைல் 0.71 சதவீதம் உயர்ந்துள்ளன.

click me!