Stock Market Today: RBI எபெக்ட்! கரடியின் பிடியில் பங்குச்சந்தை! தொடர் சரிவில் சென்செக்ஸ், நிப்டி

By Pothy RajFirst Published Dec 7, 2022, 4:01 PM IST
Highlights

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் தொடர்ந்து 4வது வர்த்தக தினமாக இன்றும் சரிவோடு வர்த்தகத்தை முடித்தன.

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் தொடர்ந்து 4வது வர்த்தக தினமாக இன்றும் சரிவோடு வர்த்தகத்தை முடித்தன.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் முதலீட்டாளர்கள் இருந்ததால், பங்கு வர்த்தகத்தில் ஆர்வத்துடன் ஈடுபடவில்லை.

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் அளவில் வட்டிவீதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 35 புள்ளிகள்தான் வட்டிவீதம் உயர்த்தப்பட்டது. நாட்டில் பணவீக்கமும் கட்டுக்குள் வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை தொடர்ந்து விற்றுக்கொண்டே இருந்தலால் சந்தையில் சரிவு தொடர்ந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, சரிவுடன் தொடங்கி பின்னர் அவ்வப்போது வர்த்தகப் புள்ளிகள் உயர்ந்தன. இருப்பினும் வர்த்தகத்தின் இடையே வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகியது.
வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 215  புள்ளிகள் குறைந்து, 62,410 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி82 புள்ளிகள் சரிந்து, 18,560 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 8 நிறுவனப் பங்குகள் லாபத்தையும், 22 நிறுவனப் பங்குகள் சரிவையும் கண்டன. ஏசியன்பெயின்ட்ஸ், இந்துஸ்தான்யுனிலீவர், லார்சன் அன்ட்டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, நெஸ்ட்லேஇந்தியா ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன.

நிப்டியில் எரிசக்தி, உலோகம், ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் தலா ஒரு சதவீதம் சரிந்தன. நிப்டியில் என்டிபிசி, பஜாஜ்பின்சர்வ், டாடாமோட்டார்ஸ், எஸ்பிஐ காப்பீடு, இன்டஸ்இன்ட் வங்கி, ஆகிய பங்குகள் இழப்பைச் சந்தித்தன.

click me!