ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் 5வது முறையாக கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தி, கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் 5வது முறையாக கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தி, கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார்.
நாட்டில் பணவீக்கம் இன்னும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்குள் வரவில்லை. இதனால் கடந்த மே மாதத்தில் இருந்து ரெப்போ ரேட் வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. இதுவரை வட்டி 5.90 சதவீதமாக இருக்கிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் 3 நாட்கள் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் இன்று முடிந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கிகவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார் அதன் அம்சங்கள் வருமாறு
EMI அதிகரிக்கும்! ரெப்போ ரேட்டை 35 புள்ளிகள் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
1. வங்கிகளுக்கு குறுகியகாலக் கடனுக்கான வட்டிவீதம் அதாவது ரெப்போ ரேட்டை 0.35 புள்ளிகள் ரிசர்வ்வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், வட்டி 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயரும்.
2. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என கடந்த செப்டம்பரில் ஆர்பிஐ கணித்திருந்தது. அதை 6.8 சதவீதமாகக் குறைத்துள்ளது.
3. நடப்பு நிதியாண்டில் நாட்டில் பணவீக்கம் அளவு 6.7 சதவீதமாக நீடிக்கும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுஅளவான 6 சதவீதத்துக்குள் 2023ம் ஆண்டு மார்ச் மாதம்தான் வரும்.
4. இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருப்பதால், வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்பது தொடரும்.
5. உலகப் பொருளாதாரச் சூழல், பொருளாதார மந்தம், உலகளவில் நாடுகளில் வட்டிவீதம் உயர்வு போன்றவற்றால் இடர்கள் அதிகரித்துள்ளன.
2022-2023ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9% ஆக உலக வங்கி கணிப்பு!!
6. பணவீக்கத்தை எதிர்த்து போராடுவது இன்னும் முடியவில்லை. பணவீக்கத்தின் தன்மையை தொடர்ந்து ஆர்பிஐ கண்காணித்து வருகிறது
7. உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வு புயலை துணிச்சலாக, நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
8. இந்திய ரூபாய் மதிப்பு தன்னுடைய இடத்தை கண்டறிய அனுமதிக்க வேண்டும், அதை உறுதி செய்யவே நாங்களும் உழைத்து வருகிறோம்.
9. அமெரிக்க டாலரின் வலுவோடு ஒப்பிடுகையில், ரூபாய் மதிப்பு அதிகமாகப் பாதிக்கப்படவில்லை
10. நாட்டின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை சமாளிக்கும் அளவில்தான் இருக்கிறது
11. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5,512 கோடி டாலராக சமாளிக்கும் நிலையில் இருக்கிறது.
12. வங்கி செயல்முறையில் ரொக்கப்பணத்தின் அளவு உபரியாகவே இருக்கிறது