Gold Price Today: ஏற்ற, இறக்கத்தில் தங்கம்! போக்குகாட்டும் விலைவாசி! இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Dec 7, 2022, 11:26 AM IST
Highlights

தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. தங்கம் விலை நேற்று குறைந்தநிலையில் இன்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. தங்கம் விலை நேற்று குறைந்தநிலையில் இன்று அதிகரித்துள்ளது.தங்கம் விலை இன்று கிராமுக்கு 6 ரூபாயும், சவரனுக்கு 48 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,010ஆகவும், சவரன், ரூ.40,80ஆகவும் இருந்தது.

EMI அதிகரிக்கும்! ரெப்போ ரேட்டை 35 புள்ளிகள் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ரூ.5,016 ஆகவும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 128ஆக ஏற்றம் கண்டது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,016க்கு விற்கப்படுகிறது.

புது வீடு கட்டுறீங்களா! சிமெண்ட் விலை மூட்டைக்கு எவ்வளவு உயரப்போகுது தெரியுமா?

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்த வாய்ப்பிருப்பதாக எழுந்த தகவலால் கடந்த இரு நாட்கள் இந்தியச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெற்றனர். இதனால் இ்ந்தியச் சந்தைகள் கடந்த 2 நாட்களாகவே சரிவில் உள்ளன.

சர்வதேச முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தைவிட்டு, மீண்டும் அமெரிக்க பங்குப்பத்திரங்கள் மீது திரும்பியதால் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது. ஆனால், தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்ற போக்கு காணப்படுவதால், இன்று விலை உயர்ந்துள்ளது.  

வாரத்தின் முதல்நாளான நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 அதிகரித்தது. ஆனால், நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ஏறக்குறைய 40 ஆயிரத்துக்கு கீழ் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று திடீரென சவரனுக்கு 48ரூபாய் அதிகரித்துள்ளது  நடுத்தரக் குடும்பத்தினருக்கும், தங்கம் வாங்க நினைப்போருக்கும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி 6 ஆண்டுகளாக உயர்கிறது! நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

வெள்ளி விலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா அதிகரித்து,  ரூ.71.0 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.71,000 ஆக உயர்ந்துள்ளது
 

click me!