Cement price hike in December:புது வீடு கட்டுறீங்களா! சிமெண்ட் விலை மூட்டைக்கு எவ்வளவு உயரப்போகுது தெரியுமா?

By Pothy RajFirst Published Dec 7, 2022, 10:08 AM IST
Highlights

சிமெண்ட் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடுமையாக உயர்ந்து வரும்நிலையில் இந்த மாதத்தில் அடுத்த உயர்வும் வரப்போகிறது. 

சிமெண்ட் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடுமையாக உயர்ந்து வரும்நிலையில் இந்த மாதத்தில் அடுத்த உயர்வும் வரப்போகிறது. 

டிசம்பர் மாதத்தில் சிமெண்ட் ஒரு மூட்டைக்கு ரூ.10 முதல் 15 வரை உயரக்கூடும் என்று எம்கே குளோபல் பைனான்சியல் சர்வீஸ் லிமிட் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சிமெண்ட் ஒரு மூட்டைக்கு கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை ரூ.16 வரை உயர்ந்துவிட்ட நிலையில், அடுத்ததாக வரும் விலை உயர்வு புதிய வீடுகட்டும் கனவில் உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி 6 ஆண்டுகளாக உயர்கிறது! நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

சிமெண்ட் விலை மேற்கு மாநிலங்கள், மத்திய மாநிலங்களில் நிலையாக இருக்கும் நிலையில், வடகிழக்கு, கிழக்கு, தென் மாநிலங்களில் விலை உயர்ந்து தொடர்ந்து வருகிறது.

எம்கே குளோபல் பைனான்சியல் சர்வீஸ் லிமிட் கூறுகையில்  “ நாடுமுழுவதும் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அடுத்த சில நாட்களில் உயரக்கூடும். 3ம் காலாண்டு மாறும்போது ஏசிசி, அம்புஜா உள்ளிட்ட சிமெண்ட் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்க உள்ளன. இதனால் விலை உயரும் எனத் தெரிகிறது.

தங்க நாணயம் வழங்கும் இந்தியாவின் முதல் ஏடிஎம் எந்திரம்: ஹைதராபாத்தில் அறிமுகம்

இதனால் சிமெண்ட் நிறுவனங்களின் லாபம், டன்னுக்கு ரூ.200 அதிகமாக உயரக்கூடும். ஆனால், 3வது காலாண்டில் சிமெண்ட் உற்பத்திச் செலவு உயர்வதன் காரணமாகவே இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படலாம்” எனத் தெரிவித்துள்ளது.
 

click me!