Governor of RBI : ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி 6 ஆண்டுகளாக உயர்கிறது! நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

By Pothy Raj  |  First Published Dec 6, 2022, 4:25 PM IST

ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்த நிதித்துறைக்கான நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்த நிதித்துறைக்கான நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல, ரிசர்வ் வங்கியின் துணை கவர்கள் தற்போது 4 பேர் உள்ளனர், அதை 8 ஆகவும் உயர்த்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

2022-2023ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9% ஆக உலக வங்கி கணிப்பு!!

நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா தலைமையில்  செயல்படுகிறது. அந்த நிலைக்குழு ரிசர்வ் வங்கி குறித்தும், செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கையாக தயாரித்துள்ளது. 

அந்த அறிக்கை வரும் டிசம்பர் 7ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்த அறிக்கை மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா ஒப்புதலுக்காக காத்திருப்பில் இருக்கிறது. மக்களவைத் தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன், மக்களவையில் இந்த அறிக்கை தாக்கலாகும்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ நிலைக்குழு அளித்துள்ள முக்கியப் பரிந்துரையில், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளாக உயர்த்தவேண்டும், துணை கவர்கள் எண்ணிக்கையை 8 ஆக உயர்த்த வேண்டும் என்பதாகும். 

தங்க நாணயம் வழங்கும் இந்தியாவின் முதல் ஏடிஎம் எந்திரம்: ஹைதராபாத்தில் அறிமுகம்

அரசு வங்கிகள் அனைத்தும் தற்போது நிதிஅமைச்சகச் சேவையின் கீழ் இருக்கிறது, அதை ரிசர்வ்வங்கியின் கீழ் கொண்டுவர வேண்டும். ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து ஒருவர் ஓய்வு பெற்றாலும், அவர் அடுத்ததாக வேறு எந்த அரசியலமைப்புச் சட்டப்பதவியிலும் நியமிக்கப்படலாம். சர்வதேச நடைமுறைகள், விதிகளைப் பின்பற்றி சுயேட்சை அதிகாரம் கொண்ட கடனஅ மேலாண்மை ஆணையம் உருவாக்கலாம்” எனப் பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
 

click me!