
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 208 புள்ளிகள் வீழ்ச்சியுடன் வர்த்தகம் முடிந்தது.
அமெரிக்காவில் கடந்த வாரம் அக்டோபர் மாத வேலைவாய்ப்பு நிலவரம் சிறப்பு ஓரளவுக்கு மனநிறைவாக இருந்தது, பணவீக்கமும் குறைந்து வருகிறது என்பதால், பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை குறைவாக உயர்த்தும் என்ற தகவல் வெளியானது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்வதைக் குறைத்து இந்தியச் சந்தைகள் பக்கம் திரும்பினர்
Share Market Today: பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 270 புள்ளிகள் வீழ்ச்சி: காரணம் என்ன?
ஆனால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பணவீக்கத்தைக் குறைக்க வட்டிவீதத்தை உயர்த்துவதற்கு பெடரல் ரிசர்வ் ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் நேற்று அமெரிக்கச் சந்தையில் சரிவு காணப்பட்டது, பங்குப்பத்திரங்களில் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும் காணப்பட்டு சரிவு இருந்தது.
பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: நிப்டி உயர்வு, சென்செக்ஸ் சரிவு! உலோகப் பங்கு ஏற்றம்
ரிசர்வ் வங்கியின் நிதிக்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இதில் வட்டிவீதம் எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்பது முதலீட்டாளர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் எச்சரிக்கையுடனே காலை முதல் மாலை வரை வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
மும்பை, தேசியப் பங்குச்சந்தையும் இன்று காலை சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கின. ஆனால், வர்த்தகம் தொடங்கியபின் சரிவிலிருந்து மீண்டும் என்ற எதிர்பார்ப்பு கடைசிவரை பொய்த்துப் போனது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிந்து, 62,626 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 58 புள்ளிகள் சரிவுடன் 18,642 புள்ளிகளில் வர்த்தகத்தை சரிவுடன் முடித்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப்பங்குகளில், 14 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன, 16 நிறுவனப் பங்குகள் மதிப்பு குறைந்தன. ஹெச்யுஎல், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ராடெக், பவர்கிரிட், ஆக்சிஸ் வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஐடிசி, ரிலையன்ஸ், ஏசியன்பெயின்ட்ஸ், டைட்டன், ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உயர்ந்தன.
நிப்டியில் பிபிசிஎல், டாடா ஸ்டீல், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்ரீஸ், யுபிஎல் நிறுவனப் பங்குகள் சரிந்தன. அதானி என்டர்பிரைசஸ், ஹெச்யுஎல், பஜாஜ் ஆட்டோ, நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய பங்குகள் விலை உயர்ந்தன.
தினசரி வரலாறு படைக்கும் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சாதனை: ஐடி,உலோகம் லாபம்
நிப்டியில் உலோகம், தகவல் தொழில்நுட்பப் பங்குகள் ஒரு சதவீதம் சரிந்தன. பொதுத்துறை பங்கு மதிப்பு ஒரு சதவீதம் உயர்ந்தது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.