ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தி முடிவெடுக்கப்பட்டதாக கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார்
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தி முடிவெடுக்கப்பட்டதாக கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார்
இரு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதிவரை நடந்தது. இதில் நாட்டின் பணவீக்கம் உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.
நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் சராசரியாக வைக்கவும், அதிகபட்சமாக 6 சதவீதம் வரை பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டு இலக்கு வைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி 6 ஆண்டுகளாக உயர்கிறது! நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
ஆனால், தொடர்ந்து 8 மாதங்களுக்கும் மேலாக பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டு இலக்கைவிட அதிகரித்தது. அதிகபட்சமாக 8 சதவீதத்தைக் கடந்த நிலையில் கடந்த மே மாதம் ரெப்போ ரேட்டை உயர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது.
கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து 3 நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. பணவீக்கம் 7 சதவீதமாகக் குறைந்தநிலையில், மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து, கடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ ரேட் வீதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டது. இதையடுத்து தற்போது கடனுக்கான வட்டிவீதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தங்க நாணயம் வழங்கும் இந்தியாவின் முதல் ஏடிஎம் எந்திரம்: ஹைதராபாத்தில் அறிமுகம்
இந்நிலையில் நிதிக்கொள்கைக் கூட்டத்தின் முடிவை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று அறிவித்தார் அதில் “ இந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தின் முடிவிலும் கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்துவது என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் குழு முடிவு எடுத்தது. இதையடுத்து, கடனுக்கான வட்டி 6.25 சதவீதமாக வட்டி வீதம் உயர்ந்துள்ளது
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நாட்டின் சில்லறைப் பணவீக்கம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களில் சில்லறைப் பணவீக்கம் 5.8 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக இருக்கும். 2023-24ம் நிதியாண்டில் இருந்து சில்லறைப் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவுக்குள் 5 சதவீதத்துக்குள் வரும். 2023 ஜூலை முதல் செப்டம்பர் வரை 5.4 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அக்டோபர் முதல் டிசம்பர் வரை 4.4 சதவீதமாகக் குறையும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 4.2 சதவீதமாகவும், 2022-23ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகக் குறையும்” எனத் தெரிவித்தார்.
இதனால் வங்கிகளில் வீட்டுக்கடன்,வாகனக் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ இனிமேல் மேலும் அதிகரிக்கும்