Nirmala Sitharaman: Forbes: உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் நிர்மலா சீதாராமன் 5-வதுமுறையாக இடம் பிடித்தார்

By Pothy RajFirst Published Dec 9, 2022, 9:39 AM IST
Highlights

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் குறித்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தொடர்ந்து 5வது முறையாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளார். 

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் குறித்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தொடர்ந்து 5வது முறையாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளார். 

பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா, நியாகா சிஇஓ பல்குனி நய்யார், உள்பட மேலும் 3 இந்தியப் பெண்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றது ஆம் ஆத்மி… 12.9% வாக்குகள் பெற்று சாதனை!!

கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலி்ல் சக்தி வாய்ந்த பெண்கள் குறித்த பட்டியலில் 37-வது இடத்தில் நிர்மலா சீதாராமன் இடம் பிடித்தார். 2022ம் ஆண்டில் ஒரு இடம் முன்னேறி, 36-வது இடத்தை நிர்மலா சீதாராமன் பிடித்துள்ளார். கடந்த 2020ல் 41வது இடத்தையும், 2019ம் ஆண்டில் 34-வது இடத்தையும் நிர்மலா சீதாராமன் பிடித்திருந்தார்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்தமைக்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் 4-வதுமுறையாக போர்ப்ஸ் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தமைக்காக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 53-வது இடத்தில் உள்ளார். ரோஷினி நாடார் 2வது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 

முன்பேசொன்னது ஏசியாநெட்! குஜராத்தில் பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்ன?

செபியின் தலைவர் மதாபி புரி புச் 54-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய உருக்கு ஆணையத்தின் தலைவர் சோமா மண்டல் 67-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் தலைமையில்தான் செயில் நிறுவனம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது, லாபத்தையும் பன்மடங்கு உயர்த்தியது

பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் 72வது இடத்தில் உள்ளார், நைகா சிஇஓ பல்குனி நய்யார் 89-வது இடத்தில் உள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீட்டுத்துறையில் பல்குனி நய்யார் பணியாற்றிவிட்டு, 2012ம் ஆண்டில் நைகா எனும் நிறுவனத்தை தொடங்கி, 2021ம்ஆண்டில் அதில் பங்குவெளியிட்டார்.

போர்ஸ் பத்திரிகையில் முதல் 3 இடங்களில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியான் இடம்பிடித்துள்ளார். கொரோனா பரவல், ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை, பிரச்சினைகளை திறம்பட கையாண்டார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டினா லகார்டே 2வது இடத்திலும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3வது இடத்திலும் உள்ளனர்.  
 

click me!