Gold Rate Today: தங்கம் விலை மீண்டும் உச்சம்! வெள்ளி கிலோ ரூ.1000க்கு மேல் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Dec 9, 2022, 10:26 AM IST
Highlights

தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்ந்து, மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்ந்து, மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 24 ரூபாயும், சவரனுக்கு 192 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,023ஆகவும், சவரன், ரூ.40,184ஆகவும் இருந்தது.

ஏற்ற, இறக்கத்தில் தங்கம்! போக்குகாட்டும் விலைவாசி! இன்றைய நிலவரம் என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து ரூ.5,047 ஆகவும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 376ஆக ஏற்றம் கண்டது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,047க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி அறிவிப்பு வெளியானபின்புதான் தங்க்தின் விலையில் ஓரளவுக்கு நிலையான போக்கு ஏற்படும். அதுவரை ஏற்ற, இறக்கங்கள் தொடரும் என சர்வதேச சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

தங்க நாணயம் வழங்கும் இந்தியாவின் முதல் ஏடிஎம் எந்திரம்: ஹைதராபாத்தில் அறிமுகம்

தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே கடும் ஊசலாட்டத்துடன் இருந்தது. சவரனுக்கு ரூ.232 அதிகரித்த நிலையில், சவரனுக்கு ரூ.280 குறைந்தது. பின்னர் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.296 விலை அதிகரித்துள்ளது,  நடுத்தரக் குடும்பத்தினருக்கும், தங்கம் வாங்க நினைப்போருக்கும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.20 பைசா அதிகரித்து,  ரூ.72.50 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து, ரூ.72,500 ஆக உயர்ந்துள்ளது

click me!