தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று குறைந்திருந்தும், அது மகிழ்ச்சி தரக்கூடிய அளவில் இல்லை. சவரன் தொடர்ந்து ரூ.40ஆயிரத்துக்கு கீழ் குறையவில்லை.
தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று குறைந்திருந்தும், அது மகிழ்ச்சி தரக்கூடிய அளவில் இல்லை. சவரன் தொடர்ந்து ரூ.40ஆயிரத்துக்கு கீழ் குறையவில்லை.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,055ஆகவும், சவரன், ரூ.40,440ஆகவும் இருந்தது.
தங்கம் விலை மீண்டும் உச்சம்! வெள்ளி கிலோ ரூ.1000க்கு மேல் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூ.5,045 ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.40 ஆயிரத்து 360ஆக வீழ்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,045க்கு விற்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும், தங்கத்தின் விலை கிராம் ரூ.5045ல் தொடங்கி, வாரத்தின் கடைசி நாளில் ரூ5,055ல் முடிந்தது. ஏறக்குறைய 10 ரூபாய் மட்டுமே மாற்றம் ஏற்பட்டது.
சர்வதேச அளவில் நிலையற்ற சூழல், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை அதிக அளவில் உயர்த்துமா அல்லது குறைவாக உயர்த்துமா என்ற பதற்றத்தால் முதலீட்டாளர்கள் ஊசலாட்ட மனநிலையுடன் இருந்தனர். இதனால் கடந்த வாரம் கடும் ஏற்ற, இறக்கத்துடனே தங்கம் விலை காணப்பட்டது.
ஏற்ற, இறக்கத்தில் தங்கம்! போக்குகாட்டும் விலைவாசி! இன்றைய நிலவரம் என்ன?
இன்று பெடரல் ரிசர்வ் கூடி வட்டிவீதம் குறித்து முடிவு எடுக்கிறது. இந்த அறிவிப்புக்குப்பின் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா சரிந்து, ரூ.72.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.800 சரிந்து, ரூ.72,800 ஆக குறைந்துள்ளது