
நவம்பர் மாத சில்லறைப் பணவீக்கம் 11 மாதங்களில் இல்லாத வகையில் முதல்முறையாக 6 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது.
2022ம் ஆண்டில் முதல்முறையாக சில்லறைப் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களில், நுகர்வோர் அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கம், தொடர்ந்து 2வது மாதமாகக் குறைந்துள்ளது.
தங்கம் விலை கொஞ்சூண்டு குறைவு ! இதெல்லாம் போதாது! இன்றைய நிலவரம் என்ன?
நவம்பர் மாதத்தில் 6 சதவீதத்துக்கும் கீழாக 5.88 சதவீதமாகக் குறைந்துள்ளது. அக்டோபரில் 6.77 சதவீதமாகக் குறைந்திருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 4.91 சதவீதமாகவே இருந்தது எனத் தெரிவித்திருந்தது.
மத்திய நிதிஅமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டசெய்தியில் “ மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவுக்குள் வந்துள்ளது. அடுத்துவரும் மாதங்களில் பருப்பு வகைகள், தானியங்கள், சமையல் எண்ணெய் வகைகள் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். இந்த உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியவரும்” எனத் தெரிவித்தார்
மறந்துடாதிங்க! பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததையடுத்து, கடந்த மே மாதத்தில் இருந்து வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதுவரை ரெப்போ ரேட் 2.25சதவீதம் என 5 முறை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 4.67சதவீதமாகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 7.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.