Share market today : முதலீட்டாளர்கள் குஷி! 7 நாட்கள் சரிவுக்குப்பின் பங்குச்சந்தை மீண்டதற்கு காரணம் என்ன?

By Pothy RajFirst Published Feb 25, 2022, 10:16 AM IST
Highlights

ரஷ்யா-உக்ரைன் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால்,  மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் கடந்த ஒரு வாரமாக வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தநிலையில் இன்று சரிவிலிருந்து மீண்டது.

ரஷ்யா-உக்ரைன் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால்,  மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் கடந்த ஒரு வாரமாக வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தநிலையில் இன்று சரிவிலிருந்து மீண்டது.

 உக்ரைன்-ரஷ்யா போரால் நேற்று வர்த்தகம் தொடங்கியது முதல் கடும்சரிவசைச் சந்தித்தது. ஏறக்குறைய 2,700 புள்ளிகளை இழந்தது, நிப்டி 800க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒரேநாளில் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் கடந்த 7 நாட்களாக சந்தையில் இழப்பு தொடர்ந்த சரிவு இன்றுகாலை முதல் முதலீட்டாளர்களு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பங்குகள் விலை உயரத்தொடங்கின. பங்குகளை ஆர்வத்துடன் கைமாற்றப்பட்டதால், சரிவிலிருந்து விரைவாக மீண்டது

வர்த்தகம் இன்று காலை தொடங்கியவுடன், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900புள்ளிகள் வரையில் உயர்ந்து, 55,463 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 267 புள்ளிகள் உயர்ந்து, 16,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பைப் பங்குச்சந்தையில் இன்டஸ்இன்ட் வங்கி, டாடாஸ்டீல், மகிந்திரா அன்ட்மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ வங்கி ஆகியவை அதிக லாபமீட்டின. நிப்டியில் டாடா மோட்டார்ஸ், யுபிஎல், அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகள் லாபமீட்டின.

உக்ரைன் மீது போர் தொடுத்தரஷ்யா மீது அமெரி்க்கா, பிரிட்டன், ஜெர்மனி,ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளதாராத் தடையால் போர் நீண்டகாலம் நடக்காது என முதலீட்டாளர்கள்நம்புகிறார்கள்.

இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தை, ஆசியப்பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றுத்துடன் காணப்பட்டது, முதலீட்டாளர்களும் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை நடத்தினர். இந்த நம்பிக்கையின் எதிரொலி இந்தியப்பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. அதுமட்டுமல்லாமல் குறுகியகால லாபமீட்டும் பங்குகளில் முதலீடு செய்யாமல், நீண்டகாலத்தில் லாபமளிக்கும்பங்குகளி்ல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள்.

இதனால், பொதுத்துறை வங்கிகள், ரியல்எஸ்டேட், ஆட்டோமொபைல், ஐடி, உலோகத்துறை பங்குகள் லாபமீட்டி வருகின்றன.
 

click me!