Maruti Suzuki Baleno 2022 : அதற்குள் 25 ஆயிரம் யூனிட்கள் காலி - முன்பதிவில் மாஸ் காட்டும் மாருதி பலேனோ

By Kevin KaarkiFirst Published Feb 25, 2022, 9:48 AM IST
Highlights

மாருதி சுசுகி நிறுவத்தின் 2022 பலேனோ மாடல் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான  மாருதி சுசுகி 2022 பலேனோ மாடலுக்கான முன்பதிவுகளை பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கியது. புதிய பலேனோ மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மாடலின் விலை அறிவிப்பின் போது, புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன்பதிவில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்தது.

இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் இந்த பிரிவில் பல்வேறு முதல்முறை அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் அட்வான்ஸ்டு K சீரிஸ் டூயல் ஜெட் என்ஜின் மற்றும் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. 2022 மாருதி சுசுகி பலேனோ மாடலில் 1.2 லிட்டர் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் லிட்டருக்கு 23.5 கிலோமீட்டர்களும், AGS வெர்ஷன் லிட்டருக்கு 22.94 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. புதிய பலேனோ மாடல்- நெக்சா புளூ, அபுலெண்ட் ரெட், கிராண்டியர் கிரே, லக்ஸ் பெய்க், ஸ்பெண்டிட் சில்வர் மற்றும் ஆர்க்டிக் வைட் என ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரில் ஹெட் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் வேரியண்டிற்கு ஏற்ப 40-க்கும் அதிக கனெக்டிவிட்டி அம்சங்கள் கொண்ட அடுத்த தலைமுறை சுசுகி கனெக்ட் டெலிமேடிக்ஸ் சிஸ்டம், 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், HD டிஸ்ப்ளே, 6 ஏர்பேக், 16 இன்ச் பிரெசிஷன் கட் அலாய் வீல்கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

கேபின் முழுமையாக மாற்றப்பட்டு 9 இன்ச் அளவில் அட்வான்ஸ்டு ஸ்மார்ட் பிளே ப்ரோ ஸ்டாண்ட் அலோன் டச் ஸ்கிரீன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய இண்டர்ஃபேஸ், கூர்மையான மற்றும் க்ரிஸ்பியான கிராஃபிக்ஸ் உள்ளது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் அலெக்சா அசிஸ்டன்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், ARKAMYS டியூயனிங் செய்யப்பட்ட புதிய சவுண்ட் சிஸ்டம் மற்றும் பல்வேறு இதர வசதிகள் உள்ளன.

இந்திய சந்தையில் புதிய பலேனோ மாடல் ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

click me!