
Share Market Live Today: வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடும் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தை தொடங்கி ஏ ற்ற இறக்கத்துடன் உள்ளன. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள்10 % உயர்வடைந்துள்ளன.
கடந்த இரு வர்த்தக தினங்களாக பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பைக் கொடுத்தது. இந்நிலையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி கடும் ஊசலாட்டத்துடன் வர்த்தகம் நகர்நது வருகிறது.
இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு:அதானி குழுமம் 413 பக்க பதிலடி
ஹிண்டன்பர்க்க அறிக்கையால் அதானி குழுமப் பங்குகள் 20 சதவீதம் வரை கடந்த வாரம் சரிந்தன. ஆனால், இன்று அதானி என்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு 7% உயர்ந்துள்ளது. சர்வதேச காரணிகளும் சாதகமாக அமைந்துள்ளது சந்தை உயர்வுக்கு காரணமாகும்.
இன்று பங்குச்சந்தை நகர்வு பெரும்பாலும் அதானிகுழுமப் பங்குகளைச் சுற்றியே இருக்கும். அதானி என்டர்பிரைசஸ்நிறுவனம் பங்குகளை விற்பனை செய்து வருகிறது, ரூ.20ஆயிரம் கோடிக்கு வெளிச்சந்தையில் பங்குகளை விற்கும் அதானி குழுமம் தனது பங்கின் விலையை மாற்றவில்லை.
இந்த பங்கு விற்பனைக் காலம் இன்றுடன் முடிகிறது. பங்குசந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் விலை சரிந்தபோதிலும் பங்கின் விலையை அதானி குழுமம் குறைக்காதது அதன் நம்பகத்தன்மையை காட்டுவதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இதனால் காலை முதல் அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை உயர்ந்து வருகிறது
அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி! கடன் கொடுத்த எஸ்பிஐ வங்கி சொல்வது என்ன?
மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்தின் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்த நிலையில் பின்னர் சரிந்தது. தற்போது, 28 புள்ளிகள் குறைந்து, 59,302 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 14 புள்ளிகள் சரிந்து, தற்போது 17,590புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.
ஜனவரி மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் 5,978 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர். கடந்தவாரத்தில் கடந்த 2 நாட்களில் நிப்டி 3 சதவீதம் சரிந்தது, அதிலும் வங்கித்துறை 6.3சதவீதம் குறைந்தது. இந்த சூழலில் தனியார் வங்கித்துறைப் பங்குகளை வாங்குவது சிறந்ததாகும்.
பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 14 நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன, 16 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன. பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, மாருதி, பஜாஜ்பின்சர்வ், சன்பார்மா, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஐடிசி, எஸ்பிஐ இன்சூரன்ஸ், டிசிஎஸ், எச்சிஎல் டெக் ஆகிய பங்குகள் உயர்வுடன் நகர்கின்றன.
எல்ஐசி-க்கு ரூ.16,500 கோடி போச்சு!அதானி குழும பங்குகளில் முதலீடு எவ்வளவு தெரியுமா?
நிப்டியில் ஆக்சிஸ்வங்கி, ஐசிஐசிஐ வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, எச்யுஎல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள்அதிக சரிவில் உள்ளன. அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், என்டிசிபி, பஜாஜ் பின்சர்வ் பங்குகள் லாபத்தில் உள்ளன.
நிப்டியில் உலோகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கிகள், ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் லாபத்தில் உள்ளன. தகவல்தொழில்நுட்பம்,ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, ஊடகம், நிதிச்சேவை, தனியார்வங்கித் துறை பங்குகள் சரிவில் உள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.