Budget 2023:Union Budget App: பட்ஜெட்டை அறிவிப்பை மொபைல் பார்க்கலாம்:'யூனியன் பட்ஜெட்' செயலி அறிமுகம்

Published : Jan 28, 2023, 02:38 PM ISTUpdated : Jan 31, 2023, 01:52 PM IST
Budget 2023:Union Budget App:  பட்ஜெட்டை அறிவிப்பை மொபைல் பார்க்கலாம்:'யூனியன் பட்ஜெட்' செயலி அறிமுகம்

சுருக்கம்

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், பட்ஜெட் அறிவிப்பை அனைத்து மக்களும் எளிதாகப் பார்க்கும் வகையில் மொபைல் செயலியிலும் வெளியிடப்படுகிறது

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், பட்ஜெட் அறிவிப்பை அனைத்து மக்களும் எளிதாகப் பார்க்கும் வகையில் மொபைல் செயலியிலும் வெளியிடப்படுகிறது

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் என்பதால் அப்போது இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஆதலால், இதுதான் கடைசி பட்ஜெட்டாக இருக்கும். 

அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி! கடன் கொடுத்த எஸ்பிஐ வங்கி சொல்வது என்ன?

பிப்ரவரி 1ம் தேதி காலை 11மணிக்கு நிர்மலா சீதா ராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த கொரோனா காலத்தில்இருந்து பட்ஜெட் தாக்கல் என்பது காகிதம் இல்லாத, டிஜிட்டல் பட்ஜெட்டாக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது ஆண்டாக டிஜிட்டல்பட்ஜெட் வெளியிடப்படுகிறது.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் பேச்சு டிஜிட்டல் வடிவத்தில் மொபைல் செயலியில் வெளியிடப்படுகிறது. இதற்காக “union Budget Mobile App” என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் பட்ஜெட் குறித்த அனைத்து ஆவணங்களும், அறிவிப்புகளும் வெளியிடப்படும்.

இந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்து, பட்ஜெட் குறித்த அறிவிப்புகளை எளிதாகப் பார்க்க முடியும். அல்லது யூனியன்பட்ஜெட் இணையதளத்தில் சென்றும் இந்த செயலியை பதவிறக்கம் செய்யலாம். 

இந்த மொபைல் செயலியில் தற்போது 2021, 2022 பட்ஜெட் குறித்த அறிவிப்புகள், பல்வேறு துறைகளின் அறிவிப்புகள், ஒதுக்கப்பட்டநிதிகள், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் போன்றவை இருக்கும். 

எல்ஐசி-க்கு ரூ.16,500 கோடி போச்சு!அதானி குழும பங்குகளில் முதலீடு எவ்வளவு தெரியுமா?

மத்திய பட்ஜெட் மொத்தம் 14 ஆவணங்களைக் கொண்டிருக்கும். ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிம் மற்றும் நிதிமசோதா இவை வழக்கமாக அச்சடிக்கப்பட்டு எம்.பி.க்களிடம் புத்தகமாக வழங்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக டேப்ளட் மூலம் வழங்கப்படுகிறது.

இந்தமுறை பொதுமக்களும் எளிதாக பட்ஜெட் குறித்த அம்சங்களை அறிந்து கொள்ள பட்ஜெட் செயலியை மத்திய நிதிஅமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் பட்ஜெட் விவரங்கள் தரப்பட்டிருக்கும்.

பட்ஜெட் தாக்கல் செய்து நிதிஅமைச்சர் முடித்தபின், பட்ஜெட் குறித்த அனைத்து விவரங்களும் மொபைல் செயலியில் பதவிவேற்றம் செய்யப்படும்

கவுதம் அதானிக்கு சவால் விடும் ஹிண்டன்பர்க் நிறுவனம்; யார் இதன் உரிமையாளர்?

பட்ஜெட் மொபைல் செயலியை தேசிய தகவல் மையமும், பொருளாதார விவகாரத்துறையும் இணைந்து உருவாக்கியுள்ளன. இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். 


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!