Share Market Live Today: ஏற்றத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு:IT, banks பங்குகள் லாபம்

By Pothy RajFirst Published Jan 24, 2023, 9:45 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றத்தோடு நகர்ந்து வருகின்றன.

Share Market Live Today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றத்தோடு நகர்ந்து வருகின்றன.

அமெரிக்கப் பங்குச்சந்தையில் உயர்வான போக்கு, பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தது ஆகியவற்றின் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் 3வது காலாண்டு அறிக்கை லாபத்தோடு இருப்பதால், அமெரிக்காவின் பங்குச்சந்தையும் சாதகமாக நகர்ந்து வருகிறது.

ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை ! சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்வு, ஐடி பங்குகள் லாபம்

இந்தியப் பங்குச்சந்தைகள் சாதகமாக இருப்பது,பட்ஜெட்டுக்கு முன்புவரை உயர்வுடன் இருக்க உதவும். இதேநிலை நீடித்தால், நிப்டி 18,200புள்ளிகளுக்கு மேல் உயரவும் வாய்ப்புள்ளது. 3ம் காலாண்டு முடிவுகள் பலமுக்கிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. இதனால் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகஅளவில் ஆர்வத்துடன் வாங்குவதால், சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது.

இதனால் தொடர்ந்து 2வது நாளக இந்தியப் பங்குசந்தைகளும் ஏற்றத்தோடு தொடங்கியுள்ளன. காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 285 புள்ளிகள் உயர்ந்து, 61,222 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 74 புள்ளிகள் உயர்ந்து, 18,192 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: காரணம் என்ன?

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில், 24 நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன, 6 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன. குறிப்பாக சன்பார்மா, நெஸ்ட்லேஇந்தியா, பவர்கிரிட், இந்துஸ்தான் யுனிலீவர், ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் விலை குறைந்துள்ளன.

நிப்டியில் டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, லார்சன்அன்ட் டூப்ரோ, இன்போசிஸ் பங்குகள் லாபத்தில்செல்கின்றன. ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, எச்யுஎல் பங்குகள் சரிவில் உள்ளன.

கரடி வலையில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: FMCG பெரும் சரிவு

 நிப்டியில் மருந்துத்துறை மற்றும ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன. ஐடி துறைப் பங்குகள் 0.85%, பொதுத்துறை வங்கி 0.62%, ஆட்டோமொபைல், தனியார் வங்கி, உலோகம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன

click me!