Stock Market Today:பள்ளத்தில் விழுந்த பங்குச்சந்தை!சென்செக்ஸ்,நிப்டி மோசமான சரிவு:அதானி பங்குகள் 20% வீழ்ச்சி

By Pothy RajFirst Published Jan 27, 2023, 4:05 PM IST
Highlights

Stock Market Today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வார வர்த்தகத்தின் கடைசிநாளான இன்று மோசமான சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன

Stock Market Today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வார வர்த்தகத்தின் கடைசிநாளான இன்று மோசமான சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன

சென்செக்ஸ் புள்ளிகள் 59ஆயிரம் புள்ளிகளாகக் குறைந்தது, நிப்டி 17600க்குள் வந்தது.
பங்குச்சந்தையில் கடந்த புதன்கிழமை மற்றும் இன்று ஆகிய இரு தினங்களில் மட்டும் 2 சதவீதம் பங்குகள் மதிப்பு குறைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக பங்குகள் மதிப்பு ஒரு சதவீதம் வரை சரிந்தன. குறிப்பாக வங்கிக்பங்குகள் விலை படுவீழ்ச்சியைச் சந்தித்தன. 

பாதாளத்தில் பங்குச்சந்தை!கடும் சரிவில் சென்செக்ஸ்,நிப்டி:அதானி பங்குகள் 17% வீழ்ச்சி

இவைஅனைத்துக்கும் மூலமாக அமைந்தது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமத்தை பற்றி ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைதான். அதானி குழுமம் செய்த மோசடிகள், தில்லுமுல்லுகள், வங்கிக்கடன்கள் ஆகியவற்றை அறிக்கையில் குறிப்பிட்டது. 

இந்த அறிக்கை வெளியானபின் அதானி குழுமத்தில் உள்ள பங்குகள் மதிப்பு 2 சதவீதம் முதல் 20சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் முதலீட்டாளர்களின் மதிப்பைப் பெறுவதற்கு தவறிவிட்டன என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிப்டியில் அதானி போர்ட், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்கள்தான் அதிகமான இழப்பைச்சந்தித்தன. 
இந்திய பங்குசந்தையில் மோசமான வீழ்ச்சி இருந்தபோது, ஆசியப் பங்குச்சந்தையிலும் அமெரிக்கப் பங்குசந்தையிலும் உயர்வு காணப்பட்டது.

அதானி குழுமத்துக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்! ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி SEBI,RBI விசாரணை தேவை

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 874 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 59,300 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 287 புள்ளிகள் குறைந்து, 17,604 புள்ளிகளில் முடிந்தது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வில் முடிந்தன, மற்ற 22 நிறுவனப் பங்குகளும் சரிவில் முடிந்தன. டாடா மோட்டார்ஸ், ஐடிசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, என்டிபிசி, சன்பார்மா, நெஸ்ட்லேஇந்தியா, பஜாஜ்பின்சர்வ் பங்குகள் விலை உயர்ந்தன.

நிப்டியில் அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் அதிகமானஇழப்பைச் சந்தித்தன. டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ் லேப், ஐடிசி, டேவிஸ் லேப்ரட்ரீஸ் பங்குகள் விலை உயர்ந்ன

வழக்குத் தொடுக்கும் அதானி குழுமம்:அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் என்ன?

நிப்டி துறைகளில் பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், எரிசக்தி பங்குகள் விலை 4 முதல் 6 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
 

click me!